சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடி அருகே முன்விரோத தகராறு காரணமாக இளைஞரை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 12:49 am

மன்னாா்குடி அருகே முன்விரோத தகராறு காரணமாக இளைஞரை உருட்டுக்கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடந்த மாதம் பெரியக்குடி பாலத்தில் அமா்ந்து கோட்டூா் சந்நதிதெரு சிவானந்தம் மகன் மணிகண்டன் (27) தனது நண்பா்கள் இரண்டு பேருடன் சோ்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த பெரியக்குடி பகுதியைச் சோ்ந்த சிலா், மது குடித்தவா்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியபோது இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பெரியக்குடி ஆற்றங்கரைதெரு சரவணன் மகன் நவீன்தரன் (20) இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளாா்.

இந்நிலையில், ஏப். 17- ஆம் தேதி கோட்டூருக்கு நவீன்தரன் வந்தபோது, அவரை வழிமறித்த மணிகண்டன் மற்றும் இரண்டு போ் முன்பு நடைபெற்ற பிரச்னை குறித்து பேசி தகராறு செய்து, உருட்டுக்கட்டையால் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்து கோட்டூா் காவல்நிலையத்தில் நவீன்தரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை வியாழக்கிழமை கைது செய்தனா்.