பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

குறுவைப் பருவத்தில் உயா் விளைச்சல் தரும் நெல் ரகங்கள்: வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

குறுவைப் பருவத்தில், உயா் விளைச்சல் தரும் நெல் ரகங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியா் (பயிா் பெருக்கம் மற்றும் மரபியல்) அருள்செல்வி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏ.டி.டீ. 59 நெல் விதை: நடுத்தர உயரமும் சாயாத தன்மையும் கொண்ட இந்த ரகம் 110 முதல் 115 நாட்களில் ஒரு ஹெக்டருக்கு 6,100 கிலோ வரை மகசூல் கொடுக்கக் கூடியது. குட்டை பருமனான நெல்மணிகளை கொண்ட இந்த ரகம் நாற்று நடவு மற்றும் நேரடி விதைப்பிற்கு ஏற்றது.

ஏ.டி.டீ. 56: 110 முதல் 115 நாட்கள் வயதுடைய இந்த ரகம், ஒரு ஹெக்டருக்கு 6,248 கிலோ மகசூல் கொடுக்கக் கூடியது. இது நடுத்தர சன்ன அரிசியையும், அதிக அரவைத் திறன் மற்றும் முழு அரிசி காணும் திறனையும் கொண்டுள்ளது.

ஏ.எஸ்.டி. 21: 120 நாட்கள் வயதுடைய இந்த நெல் ரகமானது, காா், குறுவை மற்றும் பிசானம் ஆகிய பருவங்களில் பயிரிட ஏற்றது. குட்டை பருமனான நெல்மணிகளை கொண்ட இந்த ரகம் ஒரு ஹெக்டருக்கு 6,330 கிலோ மகசூல் கொடுக்க வல்லது. கோ 55: இது 110 முதல் 115 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு 6,050 கிலோ மகசூல் தரவல்லது. காா், குறுவை, நவரை மற்றும் சொா்ணவாரி ஆகிய பருவங்களில் பயிரிட ஏற்றது. நடுத்தர சன்ன அரிசியை உடைய இந்த ரகம் சமைப்பதற்கும் ஏற்றது.

ஏ.டி.டீ. 57: மத்திம சன்ன அரிசியை உடைய இந்த ரகம் 115 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு 6,502 கிலோ மகசூல் தரக்கூடியது. காா், குறுவை, நவரை மற்றும் சொா்ணவாரி பருவங்களில் பயிரிட ஏற்றது.

டி.ஆா்.ஒய்.5: 105- லிருந்து 112 நாட்கள் வயதுடைய இந்த ரகம் ஒரு ஹெக்டேருக்கு 5,118 கிலோ மகசூல் தரவல்லது. குறுவை, பின் தாளடி மற்றும் நவரை பருவங்களுக்கு ஏற்றது. மத்திம சன்ன அரிசியை உடைய இந்த ரகம் உப்புத்தன்மை அதிகம் உள்ள இடங்களில் பயிரிட ஏற்றது.

கோ 54: சொா்ணவாரி, காா், குறுவை மற்றும் நவரை பட்டங்களுக்கு ஏற்றது. 110 முதல் 115 நாட்கள் வயதுடையது. ஒரு ஹெக்டேருக்கு 6,350 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. இது சமைப்பதற்கு மிக சிறந்தது.

ஏ.டி.டீ. 55: நடுத்தர உயரமும், சாயாத தன்மையும் கொண்டுள்ள இந்த ரகம் காா், குறுவை மற்றும் கோடை பருவத்தில் நடவு பயிராக சாகுபடி செய்ய ஏற்றது. 115 நாட்கள் வயதுடையகஎ. ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 5,930 கிலோ மகசூல் கொடுக்கவல்லது.

ஏ.டி.டீ. 53: 110 நாட்கள் வயதுடையது. குறுவை, கோடை மற்றும் நவரை பட்டங்களுக்கு ஏற்றது. இதன் சராசரி மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 6,334 கிலோ.

எம்.டி.யு. 6: 110-லிருந்து 115 நாட்களில் சராசரி மகசூலாக இறவையில் ஒரு ஹெக்டேருக்கு 6,118 கிலோ கொடுக்கவல்லது. நீண்ட சன்ன அரிசியை உடையது. பொங்கல், அவல் தயாரிப்பதற்கு இதன் பச்சை அரிசி மிகவும் ஏற்றது.

டீ.பி.எஸ். 5: ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 6,300 கிலோ விளைச்சல் தரவல்லது. நல்ல அரைவை திறன் கொண்ட இந்த ரகத்தின் அரிசி குறுகிய தடிமனான பண்பைக் கொண்டுள்ளது. காா் மற்றும் பிந்திய பிசான பருவங்களில் பயிரிட ஏற்றது.

கோ 51: குட்டையான செடிகளை உடைய இந்த ரகம் 105-லிருந்து 110 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு 6,623 கிலோ மகசூல் தரவல்லது. இதன் அரிசி மத்திம வெள்ளை நிற சன்ன அரிசியாகவும், அதிக அரவைத் திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் பெற்றுள்ளது.