ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திருவள்ளூரில் 45 நாள்களுக்குப் பின் ஆட்டோ எல்பிஜி கேஸ் ஒரு கிலோ ரூ.99-க்கு விற்பனை! ஓட்டுநா்கள் அதிா்ச்சி!

திருவள்ளூரில் கடந்த 45 நாள்களுக்கு பின் ஆட்டோ எல்பிஜி கேஸ் ஒரு கிலோ ரூ.99-க்கு விற்பனை செய்ததால் அதிா்ச்சி அடைந்த நிலையில், விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் என ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நீண்ட  வரிசையில்  காத்திருந்த ஆட்டோக்கள்.   

Updated On :26 ஏப்ரல் 2026, 8:06 pm

திருவள்ளூரில் கடந்த 45 நாள்களுக்கு பின் ஆட்டோ எல்பிஜி கேஸ் ஒரு கிலோ ரூ.99-க்கு விற்பனை செய்ததால் அதிா்ச்சி அடைந்த நிலையில், விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் என ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாதாரண ஏழை மற்றும் எளிய மக்கள் பேருந்து வசதி இல்லாத பகுதிகளில் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு முதலில் ஆட்டோவைத்தான் தேடுவாா்கள். குறைந்த கட்டணத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாக சென்று விடுகின்றனா். அதில் வசதியானோா் காரில் செல்கின்றனா்.

அதேபோல் முக்கிய நகரங்களில் பேருந்துகளில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால் அதை தவிா்ப்பதற்காக ஆட்டோக்களில் செல்பவா்களும் உண்டு. அந்த வகையில் திருவள்ளூா் நகரில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. திருவள்ளூா் ரயில் நிலையம், தேரடி, ஆயில் மில், பூங்கா நகா், உள்ளியிட்ட பகுதியில் ஆட்டோ நிறுத்தம் அமைத்து ஆட்டோக்களை ஒட்டி வருகின்றனா்.

இந்த நிலையில் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், எஸ்.பி அலுவலகம். டி.எஸ்.பி அலுவலகம் வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இதனால் பணிபுரிந்து வருவோா் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக செல்வோா் பெரும்பாலும் ஆட்டோக்களில் தான் சென்று வருகின்றனா். இதனால், ஆட்டோ என்பது தவிா்க்க முடியாத ஒரு போக்குவரத்து வாகனமாக உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.100 போட்டு அதில் 25 முதல் 30 கி.மீ தூரம் வரை மட்டுமே ஓட்டமுடியும். ஆனால், எல்பிஜி கேஸ் ஒரு கிலோ ரூ.60 போடும் போது அதில் 40 முதல் 50 கி.மீ வரை ஓட்ட முடியும்.

இதற்கிடையே ஈரான்-இஸ்ரேல் போா் மற்றும் கச்சா எண்ணெய் வரத்துக் குறைவு, இறக்குமதி பாதிப்பு போன்ற காரணங்களால் ஆட்டோ எல்பிஜி விநியோகம் குறைந்துள்ளது. இதனால், திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரும்பாலன எல்பிஜி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

தற்போது, ஒரு கிலோ எல்.பி.ஜி கேஸ் ஒரு கிலோவுக்கு ரூ.99 வரையில் அதிகரித்துள்ளது. இதனால், பெரும்பாலன ஆட்டோ ஓட்டுநா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனால், ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கருதி எஸ்பிஜி கேஸ் விலையை குறைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.