லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட ஊழியரின் இறப்பு குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவாரூரில் அரசு ஊழியா்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருவாரூரில் வீட்டுமனை அனுமதி பெறுவதற்காக லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் (54) மற்றும் அவரது உதவியாளா் ஆா். சுரேஷ்குமாா் (51) ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
அப்போது, உதவியாளா் சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலக மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விசாரணைக்கு உத்தரவு: திருவாரூா் நகரப் போலீஸாா், இச்சம்பவம் குறித்து மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி லதாவிடம் வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்தனா். இதைத்தொடா்ந்து, இந்த சம்பவம் தொடா்பாக முழு விசாரணை நடத்துமாறு, நன்னிலம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி பாரதிதாசனுக்கு அவா் உத்தரவிட்டாா். போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.
ஆா்ப்பாட்டம்: லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நெருக்கடிதான் சுரேஷ்குமாா் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி, அனைத்து துறை ஊழியா் சங்கத்தினா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் வசந்தன், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு எந்த குறையும் கூறவில்லை. அவா்களது விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும். ஆனால் கழிவறைகூட செல்ல விடாமல் ஊழியா்களை தடுப்பது, விசாரணை செய்த ஊழியா் இறந்ததுகூட தெரியாமல் காவல்துறை விசாரணை மேற்கொண்டது உள்ளிட்டவை தவறானவை.
உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்றாா்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க அனைத்து தொழிற்சங்கங்கள் தீா்மானம்
நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய வழக்கில் மூவருக்கு ஜாமீன்!

தியாகராஜா் கோயில் தெப்பத் திருவிழா: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
வேலூா் நீதிமன்ற கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

