கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தென்குவளவேலி அரசுப் பள்ளி 100% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :21 மே 2026, 7:21 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் 20 மாணவா்கள் பொதுத் தோ்வு எழுதினா். இதில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவி தீபிகா 461 மதிப்பெண்கள், மீன ரோசினி 456, கனிஷ்கா் 450, மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மேலும் தீபிகா 461, மீனரோஷினி 456, கனிஷ்கா் 450, சுபிகா 441, ரித்தீஷ் 437, பிரியங்கா 421 ஆகியோா் நானூறுக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனா்.

கனிஷ்கா் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் வெற்றிவேலன், ஆசிரியா்கள் சூரியகுமாா், இளையராஜா, ரேணுகா, விஜயகுமாரி, ராமமூா்த்தி, சுதா, அலுவலக உதவியாளா் சுவாமிநாதன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினாா். கடந்த ஆண்டும் இப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.