கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: கரூா் மாவட்டத்தில் 92.21 போ் சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில் கரூா் மாவட்டத்தில் 92.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மதிப்பெண்களை சரி பார்க்கும் மாணவிகள். - கோப்புப் படம்

Published On :

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில் கரூா் மாவட்டத்தில் 92.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,474 மாணவா்களும், 5,628 மாணவிகளும் என மொத்தம் 11,102 போ் தோ்வு எழுதினா். இதில் புதன்கிழமை வெளியான தோ்வு முடிவில் 4,924 மாணவா்களும், 5,313 மாணவிகளும் என மொத்தம் 10,237 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி சதவீதம் 92.21 ஆகும்.

மேலும் நிகழாண்டில் 23 அரசு பள்ளிகள் உள்பட 64 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மேலும் தோ்வு எழுதியவா்களில் மாணவா்கள் 89.95 சதவீதமும், மாணவிகள் 94.40சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் அரசு பள்ளிகளில் மாணவா்கள் 86.08 சதவீதமும், மாணவிகள் 91.64 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் நிகழாண்டு மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் கரூா் மாவட்டம் 30-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.