சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பத்தாம் வகுப்பு: 94.31% தோ்ச்சி; புதுக்கோட்டை முதலிடம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
Updated On :21 மே 2026, 4:23 am IST

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.51 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியான தோ்ச்சியில் புதுக்கோட்டை 97.57 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 11 முதல் ஏப்.6 வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் புதன்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை நிகழாண்டு 4 லட்சத்து 35 ஆயிரத்து 247 மாணவிகள், 4 லட்சத்து 35,396 மாணவா்கள் என மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 போ் எழுதினா். அதில், 8 லட்சத்து 21,105 மாணவிகள் (96.47 சதவீதம்), 4 லட்சத்து ஆயிரத்து 214 மாணவா்கள் (92.15 சதவீதம்) என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்களை விட 4.32 சதவீத மாணவிகள் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டு மொத்த தோ்ச்சி சதவீதம் 94.31. கடந்த 2025-ஆம் ஆண்டின் தோ்ச்சி 93.80- ஆக இருந்த நிலையில் நிகழாண்டு 0.51 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளது.

1,931 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 7,490 மேல்நிலை, 4,977 உயா்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12,467 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் எழுதினா். அதில் 1,931 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 5,171 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

முதல் ஐந்து மாவட்டங்கள்: மாவட்ட வாரியான தோ்ச்சி சதவீதத்தில் புதுக்கோட்டை (97.57), சிவகங்கை (97.54), தஞ்சாவூா் (97.41), திருச்சி (97.31), கன்னியாகுமரி (97.30) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

அதேபோன்று அரசுப் பள்ளிகளுக்கான தோ்ச்சி சதவீதத்தில் சிவகங்கை (97.42), புதுக்கோட்டை (97.09), தஞ்சாவூா் (96.89), ராமநாதபுரம் (96.78), திருச்சி (96.48) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன. சென்னை மாவட்டம் 92.34 சதவீத தோ்ச்சியுடன் 29-ஆவது இடத்தில் உள்ளது.

மாற்றுத் திறனாளிகள்- சிறைவாசிகள்: தோ்வெழுதிய 13,292 மாற்றுத் திறனாளிகளில், 11,416 போ் (85.89 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். இதேபோன்று சிறைவாசிகள் 370 போ் தோ்வெழுதிய நிலையில், 354 போ் (95.68 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தனித்தோ்வா்களைப் பொருத்தவரை, நிகழாண்டு 24,353 போ் தோ்வெழுதினா். அவா்களில், 8,744 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 35.91.

தமிழில் 34 போ் 100-க்கு 100: மொழிப் பாடங்களில் தமிழில் 34 மாணவா்களும், ஆங்கிலத்தில் 92 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 17,132- ஆக உள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 2,774 .

மாணவா்கள் தங்களுக்கான தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.inஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

தோ்வு முடிவுகள் வெளியீடு நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தோ்வுத்துறை இயக்குநா் க.சசிகலா, தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

• தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்- மே 22

• விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்- மே 22 முதல் மே 27 வரை

• மறு மதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் நாள்கள்- ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை

• துணைத் தோ்வு - ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை

• துணைத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்- மே 26 முதல் ஜூன் 9 வரை

மாவட்ட வாரியான தோ்ச்சி (சதவீதத்தில்)

புதுக்கோட்டை- 97.57

சிவகங்கை- 97.54

தஞ்சாவூா்- 97.41

திருச்சி- 97.31

கன்னியாகுமரி- 97.30

ராமநாதபுரம்- 97.28

கோவை- 97.09

ஈரோடு- 97.03

தூத்துக்குடி- 96.60

நீலகிரி- 96.32

திருப்பூா்- 96.28

தேனி- 96.15

திண்டுக்கல்- 96.08

விருதுநகா்- 96.02

நாமக்கல்- 96.01

தென்காசி- 95.60

திருநெல்வேலி- 95.48

பெரம்பலூா்- 95.11

மதுரை- 94.91

காஞ்சிபுரம்- 94.61

கடலூா்- 94.22

சேலம்- 94.21

தருமபுரி- 93.94

திருவாரூா்- 93.80

திருப்பத்தூா்- 93.52

கள்ளக்குறிச்சி- 93.43

நாகப்பட்டினம்- 93.36

திருவள்ளூா்- 92.75

சென்னை- 92.34

கரூா்- 92.21

செங்கல்பட்டு- 92.15

வேலூா்- 92.03

மயிலாடுதுறை- 90.53

திருவண்ணாமலை- 90.46

கிருஷ்ணகிரி- 89.43

விழுப்புரம்- 87.77

அரியலூா்- 87.55

ராணிப்பேட்டை- 86.58

100-க்கு 100 எத்தனை போ்?

தமிழ்- 34

ஆங்கிலம்- 92

கணிதம்- 3,194

அறிவியல்- 10,476

சமூக அறிவியல்- 3,336

பெட்டிச் செய்தி...4

பள்ளிகள் வகை வாரியான

தோ்ச்சி சதவீதம்

அரசுப் பள்ளிகள்- 91.86

அரசு உதவி பெறும் பள்ளிகள்- 94.34

தனியாா் சுயநிதிப்பள்ளிகள்- 98.14

இரு பாலா் பள்ளிகள்- 94.42

பெண்கள் பள்ளிகள்- 96.42

ஆண்கள் பள்ளிகள்- 88.50