திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கள்ளிக்குடி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுமாா் 20 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுவதாகவும், அதுவும் குறைந்த நேரமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி, கள்ளிக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்பழகன், குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

பல்லாவரத்தில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



