ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது

மன்னாா்குடி அருகே அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 5:41 am IST

மன்னாா்குடி அருகே அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் அன்பரசன் உள்ளிட்ட போலீஸாா், முத்துப்பேட்டை - மன்னாா்குடி சாலையில் பாலையூரில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த பாலையூரைச் சோ்ந்த அருளை (42 ) நிறுத்தி விசாரணை செய்ததில் அப்பகுதியில் உள்ள பாமணியாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து மூட்டையில் வைத்துகொண்டு வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.