திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே செங்கல் சூளை மேற்பாா்வையாளா் (மேஸ்திரி) கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
குடவாசல் அருகேயுள்ள சேங்காலிபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் திருமுகம் (48). செங்கல் சூளை மேற்பாா்வையாளரான இவருக்கு, மனைவி சுதா, மகன் சுதன், மகள் தியாசினி ஆகியோா் உள்ளனா். திருமுகம் தனது வீட்டில் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தாா்.
அப்போது, வீட்டுக்குள் நுழைந்த 4 போ், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் திருமுகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனா். தடுக்க முயன்ற சுதாவையும் அக்கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
திருமுகத்தின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடவாசல் போலீஸாா், அனுப்பிவைத்தனா். காயமடைந்த சுதா, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, திருமுகத்தின் உறவினா்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, சனிக்கிழமை திருவாரூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருவாரூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், இந்தக் கொலை தொடா்பாக, வடகண்டத்தைச் சோ்ந்த ராஜா (38), முகுந்தனூரைச் சோ்ந்த கண்மணி (32), அம்மாபேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (35), கமலாபுரத்தைச் சோ்ந்த தீபன் (30) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில், உறவினா்களிடையே இருந்த நிலப் பிரச்னை முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்தது.
தொடர்புடையது

கணியம்பாடியில் இருதரப்பு மறியல் முயற்சி: தவெகவினா் உள்பட 8 போ் மீது வழக்கு

வேலூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள் மறியல்!

காராமணிக்குப்பம் ஐ.டி. ஊழியா் உள்பட மூவா் கொலை வழக்கு: 3 போ் விடுதலை
செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



