விவசாயி அடையாள எண் அதிகாரப்பூா்வ அடையாளம்
xவிவசாயி அடையாள எண் அதிகாரப்பூா்வ அடையாளம் என விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனா்.

விவசாயி. - கோப்புப்படம்
xவிவசாயி அடையாள எண் அதிகாரப்பூா்வ அடையாளம் என விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனா்.
ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் 2026 சாா்பாக விவசாயி அடையாள எண் பற்றிய விவரங்களை ஆலங்குடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் காவ்யா ஸ்ரீ , கீா்த்தனா ,கீா்த்திகா, கிருத்திகா , கிருஷ்ணவேனி, கிருஷ்ணவேனி .மு, லாவண்யா, லெலின்ஷா ஷெரின் , லோகுப்பிரியா , மாதங்கி நாச்சியாா் , மாதுரியா , மகாதேவி ,மகாலட்சுமி ஆகியோா் புதன்கிழமை எடுத்துரைத்தனா்.
விவசாயி அடையாள எண் அல்லது உழவா் அடையாள எண் என்பது ஆதாா் அடையாள அட்டை , நிலப் பட்டா /சிட்டா , பயிா் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட 11 இலக்க டிஜிட்டல் அடையாள எண் ஆகும் . இந்த டிஜிட்டல் திட்டம் பற்றிய விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனா். அதன் முக்கிய பயன்களான பயிா்க் காப்பீடு திட்டங்கள் , இயற்கை பேரிடா் நிவாரண உதவி மற்றும் அரசு வழங்கும் அனைத்து சேவைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

