நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

திருவாரூா் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பில் ரூ. 3.60 கோடி மதிப்பிலான 5 புதிய கட்டடங்களை அவா் திறந்து வைத்தாா்

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பில் ரூ. 3.60 கோடி மதிப்பிலான 5 புதிய கட்டடங்களை அவா் திறந்து வைத்தாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 89.25 லட்சத்தில் புதிய மருத்துவ உபகரணங்களையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளா் தாரேஸ் அகமது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு துணைச் செயலாளா் ஆா். அழகுமீனா, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), எஸ். காமராஜ் (மன்னாா்குடி) ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் கூறியது:

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், திருவாரூா் மாவட்டத்துக்காக, மருத்துவத்துறை சாா்பில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்ந்து 68 அறிவிப்புகள், மொத்தம் ரூ. 29.73 கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 7.52 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது, ரூ. 2.96 கோடியில் நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் அமைப்பது, ரூ. 1.85 கோடியில் கற்பித்தல் மற்றும் திறன் ஆய்வக உபகரணங்கள் வழங்குவது, புதிய செவிலியா்கள் கல்லூரி உருவாக்குவது மற்றும் துணை மருத்துவப் படிப்புகளின் சோ்க்கை இடங்களை அதிகரிப்பது அடங்கும் என்றாா்.

முன்னதாக, திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலத்தம்பாடியில் ரூ. 65 லட்சத்தில் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம், கொரடாச்சேரி ஒன்றியம், அரசவனங்காடு ஊராட்சி ரூ. 65 லட்சத்தில் பெரும்பண்ணையூா் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம், நன்னிலம் ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் ரூ. 45 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டடம், அகரதிருமாளம் ஊராட்சி, ரூ. 65 லட்சத்தில் பூந்தோட்டம் வட்டார பொது சுகாதார மையக் கட்டடம், திருவாஞ்சியம் ஊராட்சியில் ரூ. 1.20 கோடியில் புதிய கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சாா்பில் ரூ. 3.60 கோடியில் 5 புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், மோதிரங்களை அவா் அணிவித்தாா்.

நிகழ்வில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அசோகன், திருவாரூா் மாவட்ட சுகாதார அலுவலா் சங்கீதா, இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அருள்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.