/

சர்வதேச செஸ் : இத்தாலி வீரர் சாம்பியன் 2-வது இடத்தைப் பிடித்தார் தமிழக வீரர் சசி கிரண்

புது தில்லி, ஜூலை 2: தில்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் இத்தாலியின் பெபியானோ கருணா 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.      தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் சசி கிரண் 6 புள்ளிகள

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:28 pm

அ. சர்ஃப்ராஸ்

புது தில்லி, ஜூலை 2: தில்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் இத்தாலியின் பெபியானோ கருணா 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.     

தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் சசி கிரண் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.

இந்திய விமானநிலைய ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற முதலாவது சர்வதேச செஸ் போட்டி, சப்தர்ஜங் விமானநிலைய அதிகாரிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.  

இப்போட்டியின் இறுதிச் சுற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் இத்தாலியின் பெபியானோ கருணா, பிலிப்பின்ஸ் நாட்டின் வெஸ்லியை தோற்கடித்து 7 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்திய வீரர் சசி கிரண், சீனாவைச் சேர்ந்த உலகச் சாம்பியன் (பெண்கள்) பட்டம் வென்ற ஹூ வய்பானை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.  இதனால் சசி கிரண் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் பரிமார்ஜன் நெகி 3.5 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தை பிடித்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி வீரர் பெபியானோ கருணாவுக்கு ரூ. 3.52 லட்சமும்,  இரண்டாவது இடம்பிடித்த இந்திய வீரர் கிருஷ்ணன் சசிகிரணுக்கு ரூ. 2. 68 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.