நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜெய ஜெய தேவி.... துர்கா தேவி சரணம்!

தீமையை அழித்து நன்மை அருள்பவள் துர்கா தேவி. புராண காலத்தில் தேவர்களும், மக்களும் மகிஷாசுரனால் கொடுந்துயரங்களை அனுபவித்து வந்தனர். அவனது தீய செயல்களுக்கு முடிவு கட்டுமாறு இறைவனிடம் அவர்கள் வேண்டினர்.  

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:46 pm

வே.சுந்தரேஸ்வரன்

தீமையை அழித்து நன்மை அருள்பவள் துர்கா தேவி. புராண காலத்தில் தேவர்களும், மக்களும் மகிஷாசுரனால் கொடுந்துயரங்களை அனுபவித்து வந்தனர். அவனது தீய செயல்களுக்கு முடிவு கட்டுமாறு இறைவனிடம் அவர்கள் வேண்டினர்.

 அவர்களின் வேண்டுகோளை ஏற்று அசுரனை அழிக்க பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவராலும் படைக்கப்பட்டாள் துர்கா தேவி. ஒன்பது நாள்கள் விரதம் இருந்து 10-ம் நாள் அசுரனை தேவி வதம் செய்தாள்.

 அதைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அஸ்வினி மாதம் தொடங்கி 9 நாள்களும் பக்தர்களால் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என பல்வேறு விழாக்களாக நாடெங்கிலும் இந்துக்களால் அம்பிகைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வங்காளத்திலும், அஸ்ஸôமிலும் துர்கா பூஜை சமூக-கலாசார விழாவாக வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், பஞ்சாப், காஷ்மீர், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 தில்லியில் உள்ள முக்கியக் குடியிருப்புப் பகுதிகள், முக்கிய சாலை சந்திப்பு ஓரப் பகுதிகளிலும் பந்தல்கள் அமைத்து துர்கா பூஜை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன.

 இரவில் நீண்ட நேரம் கலை நிகழ்ச்சிகளுடன் பூஜை நடத்தப்படுகிறது. மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் சமூக ஒற்றுமை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 தேசியத் தலைநகர் பிராந்தியத்தில்

 பிரமாண்டம்

 தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் உள்ள நொய்டா செக்டர் 50-ல் இந்த விழாவை ஒரு கருப்பொருளுடன் 7 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது அங்குள்ள சப்தரிஷி சங்கா டிரஸ்ட்.

 கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி அவரது வாழ்வை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆண்டு அந்த விழாவை நடத்திவருகிறது இவ்வமைப்பு.

 700 பேர் அமர்ந்து பூஜை, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் 100 அடி அகலமும், 45 அடி உயரமும் கொண்ட மெகா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லத்தின் தோற்றம் போன்று பந்தல் உருவாக்கப்பட்டுள்ளது.

 சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைக் கொண்டு பந்தல், அம்மன், பரிவார சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பந்தலின் முகப்புப் பகுதியில் தாகூரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 16 அடி உயர துர்கா சிலை

 பந்தலில் 16 அடி உயரத்தில் சிங்கத்தின் மீது அமர்ந்து மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சியில் துர்கா சிலை அமைக்கப்பட்டுள்ளது. வலப்புறம் கணேசர், லட்சுமியும், இடப்புறம் சரஸ்வதி, முருகனும் எழுந்தருளியுள்ளனர்.

 "விழா நாள்களில், பூஜை நிகழ்ச்சிகளுடன் தாகூரின் இலக்கியம், கதைகள், கவிதைகள் வாசிப்பு மற்றும் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன' என்கிறார் சப்தரிஷி சங்கா டிரஸ்ட் பொதுச் செயலர் அரிந்தம் முகர்ஜி.

 "நாட்டின் விடுதலையிலும், இலக்கியத்திலும் தாகூரின் பங்களிப்பு அளப்பரியது. அவரது 150-வது பிறந்த ஆண்டையொட்டி அவரது வாழ்வை கருப்பொருளாக கொண்டு துர்கா பூஜையை நடத்தி வருகிறோம்.

 மதம், மொழி, இனம் கடந்து அனைத்துத் தரப்பினரும் இப்பூஜையில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 முதல் நாளில் ரவீந்திரநாத் தாகூரின் கதைகளில் வரும் பாத்திரப் படைப்புகளைப் பற்றிய நிகழ்ச்சியும், குழந்தைகள் பங்கேற்ற ரவீந்திரநாத் தாகூர் நாடக நிகழ்ச்சி 2-ம் நாளிலும் நடைபெற்றன.

 3-ம் நாளில் சபோனி சென் குழுவினரின் தாகூர் பாடல்களின் சங்கீதக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. 2-ம் தேதி தொடங்கிய இந்தப் பூஜையில் இதுவரை 42 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிலைகள் தயாரிப்புக்கு மண், இயற்கையான வண்ணக் கலவை, தாமரை தண்டில் இருந்து தயாரிக்கப்படும் "சோலா' பொருளை மட்டுமே பயன்படுத்தினோம். வண்ணத்துக்காக வேதிச்சாயம் ஏதும் கலக்கவில்லை.

 இவ்வாறு பந்தல் அமைப்பதால்தான் கடந்த ஆண்டு, சிறந்த சிலை மற்றும் பந்தலுக்காக எங்கள் அமைப்புக்குக் கடந்த ஆண்டு விருது கிடைத்தது.

 இக்காலத் தலைமுறையினர் தெய்வ வழிபாட்டை மட்டுமின்றி நமது பாரம்பரியத்தையும், தொன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காகத்தான் பூஜை மட்டுமின்றி, சிறந்த கருப்பொருளுடன் கூடிய விழாவுக்கு ஏற்பாடு செய்கிறோம்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.