தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேகம்... வேகம்... !

மின்னல் வேகத்தில் செல்லும் கார்கள், ஒரு காதுக்குள் புகுந்து மற்றொரு காதின் வழியாகச் செல்லும் சத்தம். இதுதான் தில்லி அருகே உள்ள சர்வதேச கார் பந்தயப் பாதையில் ஒலிக்கும் சத்தம்.  ஃபார்முலா ஒன் என்கிற "எஃ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:09 am

அ. சர்ஃப்ராஸ்

மின்னல் வேகத்தில் செல்லும் கார்கள், ஒரு காதுக்குள் புகுந்து மற்றொரு காதின் வழியாகச் செல்லும் சத்தம். இதுதான் தில்லி அருகே உள்ள சர்வதேச கார் பந்தயப் பாதையில் ஒலிக்கும் சத்தம்.

 ஃபார்முலா ஒன் என்கிற "எஃப் 1 கார்' பந்தயம் இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதுதான் அனைவரின் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. டி.வி.க்களில் கேட்கும் கார் பந்தயத்தை நேரில் கண்டு களிக்க வேண்டும் என்பது வாகனப் பிரியர்களின் கனவாக உள்ளது.

 தில்லியில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் அமைந்துள்ளது கார் பந்தயத் திடல்.

ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா, ஸ்பெயின், சிங்கப்பூர், அபுதாபி, இத்தாலி, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 19 நாடுகளில் இந்த எஃப்-ஓன் கார் பந்தயப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச வரிசையில் இந்தியா 20-வது இடத்தில் அடி வைத்துள்ளது. கார் பந்தய இடம் சுமார் ரூ. 900 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதையின் மொத்த நீளமான 5.14 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரத்யேக பந்தயப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 60 முறை சுற்றி வந்து போட்டியை முடிக்க வேண்டும். ஒவ்வொரு காரும் 308.41 கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்பு பந்தயத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் உள்ள புதிய "எஃப் 1' கார் பந்தயப் பாதைகள் மணிக்கு குறைந்தபட்சம் 220 கிலோ மீட்டர் வேகம் முதல் அதிகபட்சமாக 320 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் உள்ள பந்தயப் பாதைகள் மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு மொத்தம் 16 வளைவுகள் உள்ளன. முதல் சுற்று 1 நிமிடம் 27 விநாடிகளில் கடக்க கூடியது. ஒவ்வொரு சுற்றைக் கடக்கவும் ஓட்டுநர்கள் குறைந்தது 50 முறையாவது கியரை மாற்ற வேண்டும். இதில் வளைவு 7, 10 ஆகியவை கொண்டை ஊசி வளைவுகளாக அமைந்துள்ளன. வீரர்களுக்கு சவாலான வளைவுகள். "வளைவு 4 எஃப் ஓன்' கார்ப் பந்தய ஓட்டுநர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளைவில்தான் கார்களை 320 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இங்கு பாதை 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நேர்கோடாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணில் பந்தயக் காரை ஓட்டுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்று இந்திய வீரர் நரேன் காரத்திகேயன் தெரிவித்தார். இந்தியர்களில் 90 சதவீதம் பேர் இந்த போட்டியைக் கண்டு ரசிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தப் போட்டியைக் காணப் பல்வேறு நாடுகளில் இருந்து கார் பந்தய ரசிகர்கள் தில்லிக்கு குவிந்து வருகிறார்கள்.

டிக்கெட் விற்பனை:  இந்தக் கார் பந்தயத்தைக் காண முதல் கட்டமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அமர்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரித்து 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று நிர்வாகம் தெரிவித்தது.போட்டி தொடங்கும் இடத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் பிரமாண்ட ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை மாலை வரை 80 சதவீதம் மட்டும் முடிவடைந்தது.

வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடத்தப்படும் பயிற்சிப் போட்டியைக் காணவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ. 35 ஆயிரம் வரை விற்கப்பட்டன. இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மட்டும் ரூ. 15 ஆயிரத்துக்கு விற்கப்பட்டன. இதன் காரணமாக சாதாரண மக்கள் இந்தப் போட்டியைக் காண முன்வரவில்லை. அதன் பின்னர் டிக்கெட் தேக்கம் அடைந்ததால் 6 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் 3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டன. இந்த விழாவில் ஹாலிவுட், பாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.

போட்டியின் தொடக்க விழாவைக் காண்பதற்காக ரூ. 2,500 விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தப் போட்டியில் பந்தயத் தொகை சுமார் ரூ.3 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, கொரியா போன்ற நாடுகளில் போட்டியைக் காண ரசிகர்கள் இன்றி நஷ்டத்தில் இயக்கி வருகிறார்கள். பாதிக்கும் குறைவான ரசிகர்கள் குவிவதால் அதிகப் பணம் போட்டுப் போட்டியை நடத்துபவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்தப் போட்டிகள் இந்தியாவில் வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.