""அப்போதெல்லாம் வீட்டில் தாய்மொழியில்தான் பேசுவர்''
50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது. இந்த வாரம் "அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் மயூர்விஹார் ஃபேஸ் 1-ல் வசிக்கும் தில்லிவாழ் தமிழரும், மூத்த


50 ஆண்டுகளுக்கு முந்தைய தில்லியின் பல்வேறு பரிமாணங்களை நினைவுகூரும் பகுதி இது.
இந்த வாரம் "அன்றைய தில்லி' பகுதிக்காக மனம் திறக்கிறார் மயூர்விஹார் ஃபேஸ் 1-ல் வசிக்கும் தில்லிவாழ் தமிழரும், மூத்த கர்நாடக இசைக் கலைஞருமான வசந்தா சுந்தரம் (82).
-ம் ஆண்டில் எனது தந்தை சோமசுந்தரம் ஐயர், வடக்கு ரயில்வேயில் கராச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, 2-வது உலகப் போர் நடந்து
கொண்டிருந்தது. இதனால், தந்தை தவிர எங்கள் குடும்பம் மட்டும் திருச்சியில் இருந்தது.
எனக்கு 13 வயது இருக்கும்போதே திருச்சி அகில இந்திய வானொலி நிலைய இசை நிகழ்ச்சியில் இளம் கலைஞராகப் பங்கேற்றேன். திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழாவிலும் பங்கேற்றேன்.
16 வயது இருக்கும்போது தில்லிக்கு வந்தேன். 1947 முதல் 1952 வரை இசைக் கலைஞர் பி.வி. லட்சுமணிடம் சாஸ்திரிய சங்கீதம் பயின்றேன். அப்போது, தில்லி அகில இந்திய வானொலியில் இருந்த கிருஷ்ணசாமி எனக்கு ஹிந்திமொழிப் பஜனைப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தார்.
1952-ல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. கணவர் இ.எஸ். சுந்தரம் இந்திய ராணுவத்தில் அப்போது மேஜராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். குதிரை சவாரி, நீச்சல் பயிற்சி, வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள ஊக்குவித்தார். அவர் கர்னலாக ஓய்வு பெற்ற பிறகும் என்னைப் பணியாற்றவும், படிக்கவும் ஆர்வமூட்டினார். சாஸ்திரிய சங்கீதத்திலும், ஹிந்துஸ்தானி இசையிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன்.
70 ஆண்டுகளாக இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வருகிறேன். ஏராளமான சபாக்களில் பாடியுள்ளேன். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இசை பயிற்றுவிக்கிறேன்.
1947-ம் ஆண்டின்போது நான் தில்லி வந்தபோது பல பகுதிகளிலும் பரவலாக தென்னிந்தியர்கள் வசித்து வந்தனர். கரோல் பாக், கோல் மார்க்கெட் பகுதிகளில் அதிகமாக இருந்தனர்.
அக்காலத்தில் தில்லி மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. இசைக் கச்சேரிகள் நடத்துவோர் அப்போது குறைவாக இருந்தனர். தற்போது அதிகரித்திருக்கின்றனர். மந்திர் மார்க் அருகே மெட்ராஸ் ஸ்கூல் இருந்தது. அதன் அருகே இருந்த சதுக்கத்தில்தான் இசைக் கச்சேரிகள் நடத்தப்படுவதுண்டு.
கச்சேரியைக் காண லோதி ரோடு, கரோல் பாக் உள்பட பல பகுதிகளில் இருந்தும் தென்னிந்தியர்கள் ஆர்வமுடன் வருவர். ஒருவருக்கொருவர் உறவினர் போல் பழகுவர்.
அப்போதெல்லாம் மாடி வீடுகள் இல்லை. புல்வெளியுடன் கூடிய அமைப்பில் வீடுகள் கட்டப்பட்டிருக்கும்.
இரவில் பெண்கள் வைர மூக்குத்தி, தங்கக் கம்மல், கழுத்தணி அணிந்து வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் தூங்குவர். வீட்டு முன்பாக பட்டுப்புடவை போன்ற விலை உயர்ந்த ஆடைகளை உலர வைத்தால்கூட அப்படியே கிடக்கும்.
திருட்டுப் பயம் என்பதே இல்லை. கொசுத் தொல்லையும் இல்லை.
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி தில்லி ஓர் அழகான நகரமாக மிளிர்கிறது. அப்போதெல்லாம் பூரி, நெய், வெண்ணெய், உலர் பழங்கள், ஐஸ் கிரீம் ஆகியற்றை வீடுகளுக்கே வந்து விற்பார்கள். பேரம் பேசுவதெல்லாம் கிடையாது. உணவுப் பொருள்களில் கலப்படமும் இருக்காது. மிகவும் சுத்தமாக இருக்கும். அந்த உணவுகளைச் சாப்பிட்டால் வயிற்று உபத்திரவம் ஏதும் இருக்காது.
மேலும், அன்றைய இளம் பெண்கள் ரவிக்கை, தாவணி உடையில்தான் பெரும்பாலும் இருப்பார்கள். பெரியவர்களாக இருந்தால் சேலை அணிந்திருப்பார்கள். அவரவர் கலாசார மரபைக் கடைப்பிடித்தனர். இன்றைக்கு அதெல்லாம் மறைந்து வருகிறது.
1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுடப்பட்ட செய்தி கேட்டு தில்லிவாசிகள் கவலையில் தோய்ந்திருந்தனர்.
வீடுகளில் பெண்கள் உலை வைக்கவில்லை. அவரது மறைவை தங்களது வீடுகளில் ஏற்பட்ட துக்கச் சம்பவமாகப் பாவித்தனர். மக்கள் பலரும் சோகத்தில் உறைந்திருந்தனர்.
அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி பல இடங்களில் இருந்தும் மக்கள் நீண்ட தூரம் நடந்தே வந்ததைக் காண முடிந்தது. அன்றைக்குத் தகன மேடை அருகே நானும் இருந்தேன்.
ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது அவரது முன்னிலையில் அனைத்து இளம் இசைக் கலைஞர்களும் பங்கேற்ற இசை நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
அப்போது, நடிகை ஹேமமாலினி சிறுமியாக இருந்தார். அவர் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். நான் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் ராஜாஜி பாராட்டினார்.
1959-ம் ஆண்டில் குடியரசுத் துணைத் தலைவராக டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது அவரது பிறந்த நாளுக்காக அவரது வீட்டில் கச்சேரி நிகழ்த்தினேன்.
1962-ம் ஆண்டில் இந்தியா -பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது போர் நிதி திரட்டுவதற்காக கச்சேரி நடத்தினேன். இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமியை சந்தித்ததும் மறக்க முடியாதது. எளிமை, உபசரிப்பு, அன்பு இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருந்தவர் அவர்.
வீணை வித்துவான் காரைக்குடி சாம்பசிவ ஐயர், இசைக் கலைஞர் டி.எஸ். பார்த்தசாரதி என பலரிமுடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளேன்.
அப்போதெல்லாம் வீட்டில் அவரவர் தாய் மொழியில்தான் பேசுவர். ஆனால், இன்றைக்கு தாய்மொழி தெரிந்தும் பலர் அதைப் பேச விரும்புவதில்லை. பழைமை பொக்கிஷம் போன்றது.
நமது பழைமையைத் தெரிந்துகொள்ள இளம் தலைமுறையினர் ஆர்வம்காட்ட வேண்டும். இதைத் தெரிந்துகொள்ள அவரவர் தாய்மொழி உதவிடும். அதனால், தாயைப் போல தாய்மொழியையும் நேசிக்க வேண்டும்'' என்று அக்கறையுடன் கூறுகிறார் வசந்தா சுந்தரம்.
பஸ்ஸில் தவறவிடப்பட்ட ரூ.1 லட்சம்:
போலீஸிடம் ஒப்படைத்த டிரைவர், கண்டக்டர்
கும்மிடிப்பூண்டி, பிப்.4: சென்னை மாநகர பஸ்ஸில் தவறவிடப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் ரொக்கம் இருந்த பையை அந்த பஸ்ஸின் டிரைவர் டிரைவர் கண்டக்டர் ஆகியோர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை பிராட்வேயில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இயங்கும் தடம் எண் 557 என்ற மாநகர பஸ்ஸில் டிரைவராக கே.சங்கர், கண்டக்டராக எஸ்.மோகன்குமார் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் பயணிகளுடன் இவர்கள் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலூர் அடுத்த துரைபாடி பகுதியைச் சேர்ந்த எம்.பூபாலன்(54) என்பவர் பிராட்வேயில் இருந்து மாதவரம் பைபாஸ் வரை செல்ல அந்த பஸ்ஸில் ஏறி டிரைவர் இருக்கையின் எதிர்புற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். இவர் மாதவரம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மாதவரம் பைபாஸ் நிறுத்தம் வந்ததும் பூபாலன் தான் வைத்திருந்த பையை கவனிக்காமல் பஸ்ஸில் விட்டுவிட்டு இறங்கி உள்ளார். பஸ் நகர்ந்ததும் தான் கைப்பையை பஸ்ஸிலேயே விட்டு விட்டது அறிந்த பூபாலன் பின்னால் வந்த வேறு பஸ்ஸில் ஏறி தான் முன்னர் பயணித்த மாநகர பஸ்ஸில் தவறவிட்ட பையை மீட்கச் சென்றார்.
இந்நிலையில் காலை 6.40 மணி அளவில் பஸ் கும்மிடிப்பூண்டியை நெருங்கும் போது பஸ்ஸில் பயணிகள் இல்லாத சூழலில் டிரைவர் சங்கரும், கண்டக்டர் மோகன்குமாரும் பஸ்ஸின் இருக்கையில் கைப்பை இருப்பதைக் கண்டனர்.
அதைத் திறந்த போது அதில் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டும், பல ரசீதுகளும் இருந்தது.
இதனை தொடர்ந்து பஸ்ûஸ நேராக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு ஒட்டி வந்து இருவரும், போக்குவரத்து ஆய்வாளர் ராஜகோபாலிடம் பணம் இருந்த பையை ஒப்படைத்து, அதுகுறித்து புகாரும் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் அசோக் மேத்தா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் இது குறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பணத்தை தவறவிட்ட பூபாலன் அவரது அலுவலக மேலாளர் அகமதுவுடன் காவல் நிலையத்திற்கு வந்து தவறவிட்ட கைப்பை தனது எனக் கூறியதுடன் அதற்குரிய அடையாளங்களையும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீஸôர் அந்த கைப்பையை சோதித்ததில் அதில் மொத்தம் 1 லட்சத்து 600 ரூபாய் ரொக்கம் இருந்தது. மேலும் லாரிகளுக்கு கம்பெனிகளால் பணம் பட்டுவாடா செய்யப்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான ரசீதுகளும் அதில் இருந்தன. இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி குமார் பணத்தை தவறவிட்ட பூபாளனிடம் அந்த பணத்தை ஒப்படைத்ததார்.
மேலும், நேர்மையாகச் செயல்பட்டு கண்டெடுத்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பஸ் டிரைவர் கே.சங்கர், கண்டக்டர் எஸ்.மோகன்குமார் ஆகியோரை பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...