தில்லி உயிரியல் பூங்காவில் புதிய வகை தேவாங்குகள்
தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் "ஸ்லோ லாரிஸ்' (ள்ப்ர்ஜ் ப்ர்ழ்ண்ள்) என்று அழைக்கப்படும் புதிய வகை தேவாங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளன.


தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் "ஸ்லோ லாரிஸ்' (ள்ப்ர்ஜ் ப்ர்ழ்ண்ள்) என்று அழைக்கப்படும் புதிய வகை தேவாங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளன.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பு துபையில் இருந்து தில்லி வழியாக பாங்காக் சென்ற விமானத்தில் கடத்தப்பட முயன்ற அந்த தேவாங்கு குட்டிகளை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டனர். அவை இரண்டும் பூங்கா கால்நடை மருத்துவனையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, உயிரியல் பூங்காவின் மூத்த வனவிலங்கு மருத்துவர் ந. பன்னீர் செல்வம் கூறியதாவது:
ஸ்லெண்டர் லாரிஸ்' வகை தேவாங்குகள் இந்தியாவில் பல உயிரியல் பூங்காக்களில் உள்ளன. ஆனால், "ஸ்லோ லாரிஸ்' வகை தேவாங்கு, நாட்டில் முதல் முறையாக தில்லி உயிரியல் பூங்காவில்தான் வரப்பெற்றுள்ளன.
இந்த வகை தேவாங்குகள் இந்தோனேஷியா, கம்போடியா, பர்மா, இலங்கை ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுபவை.
மிகச் சிறியவை: குரங்கு இனத்தைச் சேர்ந்த "ஸ்லோ லாரிஸ்' தேவாங்குகள் மிகவும் சிறியவை. 26 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியவை. 2 கிலோவுக்கும் குறைவான எடையுள்ளவை.
செடிகளை கடித்து அவற்றுக்குள் இருக்கும் இனிப்பு போன்ற "நெக்டர்' திரவத்தை சாப்பிடக்கூடியவை. பசுமையான இலை தழைகள், சிறு பல்லிகள், பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், ஊர்வன ஆகியவற்றையும் உட்கொள்பவை.
தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள இரு தேவாங்குகளும் வாழைப்பழம் சாப்பிட பழக்கப்படுத்தப்பட்டிருந்தன.
அவற்றுக்கேற்ற உணவை கண்டறிந்து முட்டை, தேன், வேகவைத்த கேரட், ஆப்பிள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை தற்போது வழங்கி வருகிறோம். அவற்றின் பராமரிப்பு காலம் (30 நாள்கள்) முடிந்துவிட்டது.
அதனால், அவற்றைப் பார்க்க பார்வையாளர்களை அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
பெண் தேவாங்கு: இந்த தேவாங்குகள் இரண்டும் ஆண் பாலாக இருப்பதால் ஒரு பெண் தேவாங்கை வெளிநாட்டு உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவர திட்டமிட்டு வருகிறோம் என்று பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தற்போது, தில்லி உயிரியல் பூங்காவில் 1,500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேவாங்குகளை வீடுகளில் சிலர் வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. தேவாங்குகளின் தோல் மற்றும் பற்கள், அலங்காரப் பொருளாகவும், மருத்துவ பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்தபடுவதாகவும் கூறப்படுகிறது.
தேவாங்குகள் சிறியதாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானவை. காடுகளில் சூரிய ஒளிக்கரடி, குள்ளநரி, ஓநாய் ஆகியவை தாக்க வரும்போது, தேவாங்கு தனது முன்பக்க கைகளை உயரே தூக்கிக் கொள்ளும்.
அப்போது உடலில் சுரக்கும் ஒரு வகை திரவத்தை, உமிழ்நீருடன் சேர்த்து, தன்னைத் தாக்க வரும் மிருகத்தைக் கடிக்கும். அது விஷ பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...