கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

தில்லிகை இலக்கியக் கூட்டம்

தில்லிகை இலக்கிய வட்டத்தின் சார்பில் "இலக்கிய ஆளுமைகள்' என்ற தலைப்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை இலக்கியக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:56 am IST

தில்லிகை இலக்கிய வட்டத்தின் சார்பில் "இலக்கிய ஆளுமைகள்' என்ற தலைப்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை இலக்கியக் கூட்டம் நடைபெற்றது.

அதில், தமிழின் நவீன பயண இலக்கியத்தின் தந்தையாக கருதப்படும் சே. பா. நரசிம்மலு நாயுடுவின் ஆளுமை பற்றி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ச. பாரதிபிரகாஷ் பேசினார்.

"யாத்திரை என்பதை இலக்கிய வடிவமாக மாற்றியவர் நரசிம்மலு நாயுடு. ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் என்ற தமிழின் நவீனப் பயண இலக்கிய நூலை 1889-ஆம் ஆண்டு அவர் எழுதினார்.

அந்த நூலில், தான் பயணம் செய்த பகுதிகளிலிருந்த கல்வெட்டுகள், கோட்டைகள், மடங்கள் ஆகியவை குறித்து பதிவு செய்துள்ளார். அந்த நூலை மறுபதிப்பு செய்வது அவசியம்' என்று அவர் குறிப்பிட்டார்.

பாரதி, பாரதிதாசன் ஆளுமைகள் குறித்து தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி காளியப்பன் பேசினார். "தேச விடுதலையை உயர்த்திப் பிடித்த பாரதியின் கவிதைகள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்ற வரையறைக்குள் கவிதைகளை எழுதியவர் பாரதிதாசன். இரு கவிஞர்களும் கவிதைக்கான பாடு பொருள்களை சமூகத்திலிருந்தே எடுத்தனர்' என்றார் அவர்.

டோனி மாரிசன், டோரிஸ் லெஸ்ஸிங் ஆகிய பெண்ணிய எழுத்தாளர்கள் குறித்து, உலக இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி அ.சு. காயத்ரி பேசினார்.

கருப்பின மக்களின் மன நிலையைக் காட்சிப்படுத்தும் டோனி மாரிசனின் எழுத்து குறித்தும், பெண் எழுத்தாளரின் வாழ்க்கை உணர்வுகளை மையப்படுத்தி அமைந்த "தி கோல்டன் நோட் புக்' என்ற புதினத்தில் டோரிஸ் லெஸ்ஸிங்கின் இலக்கிய ஆளுமை குறித்

தும் அவர் எடுத்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.