தென்னாப்பிரிக்க போராட்டத்தில் தமிழர்கள்: நூறாண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடி, பொறையார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழர்கள் பலர் தென்னாப்பிரிக்காவுக்கு ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றனர். இதனால், அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பியதும், பொறையார், தரங்கம்பாடி, மயிலாடுதுறை (மாயவரம்) தில்லையாடி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றார். அப்போது, தென்னாப்பிரிக்காவில் தன்னுடன் களப் பணியாற்றிய தமிழர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். இதை நினைவுகூரும் விதமாக மேற்கண்ட இடங்களில் இக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.