நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

டெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: பாஜக குற்றச்சாட்டு

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் "ஆம் ஆத்மி' அரசு தோல்வியடைந்து விட்டது என்று தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டினார்.

Published On :

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் "ஆம் ஆத்மி' அரசு தோல்வியடைந்து விட்டது என்று தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கவும், நோயைக் கட்டுப்படுத்துவதிலும் தில்லி அரசும், அதன் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டனர். டெங்கு நோயாளிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளும் அளிக்கப்படுவதில்லை. தில்லி மருத்துவமனைகளில் டெங்கு பாதித்த நோயாளிகளுக்கான போதிய படுக்கைகள் இருப்பில் இல்லை.

ஜனக்புரியிலும், தாஹிர்பூரிலும் 1000 படுக்கைகள் வசதி கொண்ட இரு பெரிய மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்து 7 மாதங்களாகியும் அவற்றைச் செயல்படுத்துவதற்கு அரசு ஆர்வம் காட்டவில்லை.

அதேபோன்று, தில்லி அரசால் தொடங்கப்பட்ட "மொஹல்லா கிளினிக்' திட்டத்தில் வாங்கப்பட்ட 150 அவசரகால மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்து வருகின்றன. அரசு இதுவரை ஒரு கிளினிக்கை மட்டுமே திறந்துள்ளது.

தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், "சுகாதாரத் துறைக்கு 1.5 தடவை அதிகமாக நிதி ஒதுக்கியதாக தில்லி அரசு அறிவித்தது. ஆனால், தில்லியில் சுகாதாரப் பணிகள் தொடர்ந்து மோசமாகி வருகின்றன. டெங்கு நோய் தடுப்பு விஷயத்தில் மருத்துவமனைகள் தில்லி அரசும், நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லியின் மூன்று மாநகராட்சி மேயர்களும் சிறப்பு சுகாதார இயக்கத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.