பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: தில்லியில் அதிர்ச்சி சம்பவம்

தில்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் வயதான தம்பதி, அவர்களது மகன் என 3 பேர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

தில்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் வயதான தம்பதி, அவர்களது மகன் என 3 பேர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வடக்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் மதூர் வர்மா கூறியதாவது: சராய் ரோஹில்லா பகுதியிலுள்ள ஒரு காலனியில், தங்களது 30 வயது மகனுடன் சந்து லால் (70) - குல்லு தேவி (65) தம்பதியர் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலையில் இருந்து அவர்களது வீடு பூட்டியே கிடந்தது. இதனால்,  சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் உள்ளே சென்றனர். அங்கு பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், சந்து லால், குல்லு தேவி ஆகியோர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மற்றொரு அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவர்களது மகனும் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

 இதையடுத்து, மூன்று சடலங்களையும் மீட்ட போலீஸார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியருக்கு நன்றாக பழக்கமானவர்களே, இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 3 படுகொலைகளை அரங்கேற்றிவிட்டு, கொலையாளிகள் வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் மதூர் வர்மா.

 6 பேர் சிக்கினர்: இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் 2 பேர், சந்துலால் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள். கடந்த வாரம்தான் வீட்டை காலி செய்து சென்றுள்ளனர். மற்றொருவர், சந்து லாலின் உறவினர் ஆவார் என போலீஸார் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.