தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்! (அக். 9)தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!

ஜேஎன்யு பேராசிரியர்கள், மாணவர்கள் மீதான சுவாமியின் கருத்துக்கு ஆம் ஆத்மி பதிலடி

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "நக்சல்'கள் எனக் குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியதற்கு ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது.

Published On :

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் "நக்சல்'கள் எனக் குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியதற்கு ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது.

 அவர் அவ்வாறு பேசியுள்ளது அவரது விரக்தியின் நிலையை எடுத்துக்காட்டுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தில்லி பிரிவு அமைப்பாளர் திலீப் பாண்டே, செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சுப்பிரமணியன் சுவாமியின் இக்கருத்து அவரது விரக்தி நிலையை எடுத்துக்காட்டுகிறது. இவர் மீது வருங்கால மாணவர்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்றால், நல்ல எண்ண வெளிப்பாடுடன் அவர் நடந்து கொள்ள வேண்டும்.

 தில்லியில் ஏற்கெனவே நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பக் கல்வி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று தில்லி அமைச்சரவை ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. எனவே, சுப்பிரமணியன் சுவாமி உண்மையில் நேதாஜியை மதிப்பதாக இருந்தால், தில்லி அரசின் பரிந்துரையை ஏற்று பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சிகள் எடுக்க உறுதுணையாக செயல்பட வேண்டும். எனவே, இப்போது அவர் கொண்டுள்ள எண்ணம் சரியானது அல்ல. இது அவரது இரட்டை மனநிலையை எடுத்து காட்டுகிறது' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.