ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

"ஷீர்டி சாய்பாபா பக்தி மாலை' நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் ஆனந்த் சுப்ரமணியம் எழுதிய "ஷீர்டி சாய்பாபாவின் பக்தி மாலை' நூல் வெளியீட்டு விழா தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :

எழுத்தாளர் ஆனந்த் சுப்ரமணியம் எழுதிய "ஷீர்டி சாய்பாபாவின் பக்தி மாலை' நூல் வெளியீட்டு விழா தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

 விருதுநகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன், தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மு.கற்பக விநாயகம் நூலை வெளியிட்டுப் பேசினார்.

 "நான் சாய் பாபாவின் பக்தர். எல்லாம் இறைவனின் செயல் என்ற எண்ணம்தான் என்னிடம் ஆத்மார்த்தமான நம்பிக்கையை என் மனதில் விதைத்தது. இது எனக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையை அளித்து வருகிறது. இப்புத்தகத்தில் பல நற்பண்புகளை விதைக்கக்கூடிய கருத்துகள் அடங்கிய வரிகள் நிறைந்துள்ளன. பக்குவம், பண்பாடு, அடக்கம், தியாகம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுடன் எது மனதை செம்மைப்படுத்துகிறதோ அதுதான் பக்தி. எனவே, சாய்பாபாவின் பக்தியை எடுத்துரைக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.

 தில்லி தமிழ்ச் சங்க துணைத் தலைவர் கே.வி.கே.பெருமாள், இணைச் செயலாளர் சத்யா அசோகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பாலுச்சாமி, கே.முத்துசுவாமி, முன்னாள் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி, முன்னாள் பொருளாளர் பி.அறிவழகன், விருதுநகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன் நிர்வாக அறங்காவலர் பெ.ராகவன் நாயுடு, தில்லி மனித உரிமைகள் கழகச் செயலாளர் ஆ.பிரமநாயகம், என்டிஎம்சி துணை இயக்குநர் செல்லையா, தமிழ் நிகழ் கலை இயக்கப் பொதுச் செயாளர் எம்.எஸ்.ரவி உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரபல திரை இசைப் பாடகியும், கர்நாடகப் பாடகியுமான மஹதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.