பாலியல் பலாத்கார வழக்கில் போதிய சாட்சியம் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்தவர் அமன் சௌத்ரி. இவர் பெண் ஒருவரை பாலியல் பாலத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதில் புகார் அளித்த பெண், "எனக்கும், அமன் சௌத்ரிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் எனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்கக் கொடுத்து அமன் சௌத்ரி பலாத்காரம் செய்துவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போலீஸார் அமன் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான பெண், ஏற்கெனவே புகாரில் அளித்ததற்கு மாறாக வாக்குமூலம் அளித்தார்.
அதாவது, அமன் சௌத்ரிக்கு தொழில் செய்வதற்காக ரூ.2.50 லட்சம் பணம் கொடுத்திருந்தாகவும், அதை அவர் திருப்பித் தராததால் வழக்குரைஞரின் ஆலோசனையின் பேரில் அமன் மீது பாலியல் பொய் வழக்கு அளித்ததாகக் கூறினார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட அமன் சௌத்ரி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை வழக்கில் இருந்து விடுவித்து கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் ஜெயின் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரம் அருகே ஒருவா் வெட்டிக் கொலை உறவினா் கைது
ஒசூரில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

விருத்தாசலத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 3 போ் கைது

ஆட்சியைத் தக்கவைக்க உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராகும் தவெக அரசு! டாக்டா் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


