நொய்டாவில் நவ.5-இல் நாம சங்கீர்த்தன விழா

நொய்டா ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் சார்பில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி விட்டல் மகராஜ் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன விழா நடைபெற உள்ளது.
Updated on
1 min read

நொய்டா ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் சார்பில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி விட்டல் மகராஜ் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன விழா நடைபெற உள்ளது.
இந்த விழா நொய்டா செக்டார் 32 -இல் (நொய்டா மெட்ரோ ஸ்டேஷன் அருகில்)  உள்ள மகராஜா அகரேசன் மண்டபத்தில் நவம்பர் 5-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.  இதில் கும்பகோணம் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த  ஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் பங்கேற்கும் "நாம சாகர்' எனும் பிரம்மாண்ட நாம சங்கீர்த்தனமும்,  உபன்யாசமும் நடைபெறும்.   
இதில் தமது 60 சிஷ்யர்களுடன் இந்நிகழ்ச்சியை விட்டல் மகராஜ் நடத்தவுள்ளார்.  இதற்கான ஏற்பாடுகளை நொய்டா,  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com