சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

டிடிஇஏ லோதி எஸ்டேட் பள்ளி ஆண்டு விழா

லோதி எஸ்டேட்டில் உள்ள தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ)  பள்ளியின் ஆண்டு விழா புதன் கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:18 pm

DIN

லோதி எஸ்டேட்டில் உள்ள தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ)  பள்ளியின் ஆண்டு விழா புதன் கிழமை நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவி வத்சலா தலைமை வகித்தார்.  பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலெட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
டிடிஇஏ செயலர் ராஜு, இணைச் செயலர் ரவிக்குமார் நாயக்கர், பள்ளியின்இணைச் செயலர் முருகன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், செயலர் யஷ் ராஜா, பிற டிடிஇஏ பள்ளிகளின் இணைச் செயலர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் உமா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் துணை முதல்வர் ரஞ்சன் குப்தா ஆண்டறிக்கையை வாசித்தார். 2016-17 ஆம் கல்வியாண்டில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் விசாலாட்சி நன்றியுரை வழங்கினார். பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்து நவரசத்தை வெளிப்படுத்தும் வகையில் நடனம், நாடகம் ஆகியவை இடம் பெற்றன.
முன்னதாக பள்ளியின் செயல்முறைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டின் இயக்கத்தை விழாத் தலைவர் வத்சலா தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.