அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

"யமுனை நதி மாசுவால் தலைநகரில் அடுத்த சில நாள்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்'

யமுனையில் அதிகரித்துள்ள மாசு காரணமாக தலைநகரில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் விநியோகம் அடுத்து வரும் சில நாள்களுக்கு பாதிக்கப்படும் என்று தில்லி குடிநீர் வாரியம் (டிஜேபி) அறிவித்துள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:33 pm

DIN

யமுனையில் அதிகரித்துள்ள மாசு காரணமாக தலைநகரில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் விநியோகம் அடுத்து வரும் சில நாள்களுக்கு பாதிக்கப்படும் என்று தில்லி குடிநீர் வாரியம் (டிஜேபி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியத்தின் உயர் அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
யமுனை நதியில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரித்துள்ளது. ஹரியாணா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய கால்வாய் மூலம் வழங்கி வரும் நீரின் அளவு குறைவு காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் குடிநீர் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 இதன் காரணமாக ஒட்டுமொத்த மேற்கு தில்லி, வடக்கு தில்லி, மத்திய தில்லி, தெற்கு தில்லியின் சில பகுதிகள், தில்லி கன்டோன்மென்ட், புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகமானது நிலைமை சீரடையும் வரை பாதிக்கப்படும். 
இந்நிலையில், தற்போது சுத்திகரிக்கப்படும் குடிநீரை தலைநகர் முழுவதும் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
குடிநீர் டேங்கர்கள் தேவைப்படுவோர் மத்திய கட்டுப்பாட்டு அறை எண்களான 1916, 23527679, 23634469 ஆகியவற்றையும், கிரேட்டர் கைலாஷ் (29234746, 29434747), ஆர்.கே. புரம் (26193218 ), பஸ்சிம் விஹார் (25281197), ஜனக்புரி டி - பிளாக் (28521123), சிவாஜி என்கிளேவ் (25193140, 25174140), அசோக் விஹார் (27308015), பஞ்சாபி பாக் (25223658), கேவல் பார்க் (27681578, 27677877), துவாரகா (65290868), வசந்த் குஞ்ஜ் (26137216), ஈத்கா (23537397, 23677129) ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.