காங்கிரஸில் இருந்து விலகிய தொண்டர்கள் திரும்பி விட்டனர்: சஞ்சய் நிருபம்
பாஜகவில் சேர்வதற்காக காங்கிரஸில் இருந்து விலகிய 300 தொண்டர்கள் தற்போது தாய்க் கட்சிக்கே திரும்பி விட்டனர் என்று மும்பை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.


பாஜகவில் சேர்வதற்காக காங்கிரஸில் இருந்து விலகிய 300 தொண்டர்கள் தற்போது தாய்க் கட்சிக்கே திரும்பி விட்டனர் என்று மும்பை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
பாஜகவில் சேர்வதற்காக காங்கிரஸில் இருந்து விலகிய 300 தொண்டர்கள் தற்போது தாய்க் கட்சிக்கே திரும்பி விட்டனர். இது தாய்வீடு திரும்புவது போன்றதாகும். இது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.
அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தலைவரான அரவிந்தர் சிங் லவ்லியும் காங்கிரஸுக்குத் திரும்பி விட்டார்.
பாஜக தவறான முறையில் இயங்குகிறது என்பது முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைவதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒரு கட்சி நல்ல முறையில் செயல்பட வலுவான தலைமையும் வெளிப்படையான நிர்வாகமும் அவசியம். காங்கிரஸின் நேர்மையான கொள்கைகளில் வளர்ந்த தொண்டர்களால் பாஜகவின் ஊழல் மிகுந்த சூழலில் பணியாற்ற முடியாது.
ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், குஜராத்தில் கட்சியின் பாராட்டத்தக்க வெற்றிகளும் எங்கள் கட்சியின் பக்கம் காற்று வீசுமாறு செய்துள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் துன்பங்கள் குறித்து பாஜக அக்கறை கொள்ளாததாலும், அக்கட்சி ஆளும் மாநில அரசுகளின் திறமையின்மையாலும் அதன் தலைவர்கள் அக்கட்சி மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்றார் சஞ்சய் நிருபம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...