பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதிதாக வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்த கூடுதலாக  நிலங்களை ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு என்டிஎம்சி கோரிக்கை

வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கும் வகையில், தில்லி வளர்ச்சி ஆணையம்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 1:57 am

DIN

வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கும் வகையில், தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) கூடுதலாக நிலங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மேயர் ப்ரீத்தி அகர்வால் மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரத் துறை துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை புதன்கிழமை சந்தித்துப் பேசுகையில் இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.
இச்சந்திப்பு குறித்து மேயர் ப்ரீத்தி அகர்வால் கூறியதாவது: வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பார்க்கிங் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 
இருப்பினும், பார்க்கிங் வசதியை மேம்படுத்தும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை சந்தித்துப் பேசினேன். 
அப்போது, காந்தி மைதானம், ஈத்கா ஆகிய இடங்களில் உள்ள டிடிஏவுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடங்களை அதிகளவு வாகனங்களை நிறுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும் எனவும் என்டிஎம்சி பகுதியில் அதிகளவு வாகன நிறுத்துமிடங்களை அமைப்பதற்கு போதுமான அளவு நிலங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். 
 ஈத்கா பகுதியில் டிடிஏவுக்குச் சொந்தமான நிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இறைச்சிக் கூடம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இந்த நிலத்தை திருப்பிக் கொடுக்குமாறு டிடிஏ அதிகாரிகள் அண்மையில் கேட்டுக் கொண்டனர். 
இது தொடர்பாகவும் அமைச்சரிடம் பேசினேன். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மீள் குடியமர்வுக் காலனிகளுக்கான நிலத்தை மாநகராட்சிக்கே வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். 
ராஜன் பாபு நுரையீரல் மருத்துவமனையில் கூடுதலாக உள்ள நிலத்தை வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 
என்டிஎம்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்தேன் என்றார் ப்ரீத்தி அகர்வால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.