டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாழத் தகுதியற்ற நகரம் தில்லி: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் குற்றச்சாட்டு

நாட்டின் தலைநகரான தில்லி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக கிட்டத்தட்ட மாறிவிட்டது என்று மத்திய நகர்ப்புற விவகாரம்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:33 pm

DIN

நாட்டின் தலைநகரான தில்லி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக கிட்டத்தட்ட மாறிவிட்டது என்று மத்திய நகர்ப்புற விவகாரம், வீட்டுவசதித் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி சாடினார். இதன் மூலம் அவர் தில்லி அரசை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹர்தீப் சிங் புரி வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசியதாவது:
தில்லியில் 7,000 அரசு பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த குறைபாட்டுக்கு குற்ற அலட்சியமே காரணம்.
இதனால் தில்லி மக்கள் கார்களை அதிகமாக வாங்குகிறார்கள். இதனால் ஏற்படும் வாகன நெரிசலுக்கு தில்லிவாசிகளை குற்றம்சாட்ட முடியாது. இதற்கு பொதுப் போக்குவரத்து வசதி சரிவர இல்லாததே காரணம். இதனால் தில்லி கிட்டத்தட்ட மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது.
உலகிலேயே 4-வது பெரிய மெட்ரோ ரயில் வழித்தடமாக தில்லி மெட்ரோ திகழ்கிறது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தில்லி மெட்ரோவின் 4-வது விரிவாக்கத் திட்டம் நிலுவையில் உள்ளது. 
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ஆர்டிஎஸ் காரிடர் திட்டமும் நிலுவையில் உள்ளது. ஆகையால், அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தில்லியை வாழ தகுதியான நகரமாக மாற்ற உடனடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
சீலிங் பிரச்னைக்கான தீர்வு தயார்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "தில்லி சீலிங் பிரச்னைக்கான தீர்வுக்காண நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்னைக்கான தீர்வு தயாராகும் நிலையில் உள்ளது என்று உறுதி அளிக்கிறேன். 
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது, மத்திய நகர்ப்புற விவகாரம், வீட்டு வசதித் துறை அமைச்சக அதிகாரிகளும், தில்லி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகளும் உரிய பதில் மனுக்களை தாக்கல் செய்வார்கள். 
இதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் பொறுமையுடன் அமைதிகாக்க வேண்டும் என்றார்.
தில்லி சீலிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தில்லி மாஸ்டர் பிளான் 2021-இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வரைவு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 800 ஆலோசனைகள் வரப்பெற்றுள்ளன. அதைத்தவிர மக்களிடம் நேரடி கருத்துக் கேட்பும் நடைபெற்றுள்ளது. 
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திருத்தத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, டிடிஏ விரைவில் தாக்கல் செய்ய  உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.