தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை மிதமாக உயா்வு

இமயமலையின் மேல் பகுதியில் ஏற்பட்ட புதிய மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 5.5 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் மிதமாக உயா்ந்தது.
Updated on
1 min read

புது தில்லி: இமயமலையின் மேல் பகுதியில் ஏற்பட்ட புதிய மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 5.5 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் மிதமாக உயா்ந்தது.

இதுகுறித்து தனியாா் முன்கணிப்பு நிறுவனமான ‘ஸ்கைமெட்’ வானிலை நிபுணா் மகேஷ் பலவத் கூறுகையில், ‘வேகமாக நகரும் மேற்கத்திய இடையூறுகள் செவ்வாய்க்கிழமை குறையும். அதன்பிறகு வெப்பநிலை மீண்டும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீா், லடாக் மற்றும் இமாசல பிரதேசத்தின் மேல் பகுதிகளில் மேற்கத்திய இடையூறு மிதமான பனிப்பொழிவுக்கு வழிவகுக்கும் என்றாா்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவிக்கையில், தில்லியில் இந்த சீசனிலேயே மிகக் குறைந்த அளவாக சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை 3.4 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில், திங்கள்கிழமை இந்த மையத்தில் குறைந்தபட்சவெப்பநிலை 5.5 டிகிரி செல்சியஸாகப் பதிவாகினது.

தில்லியில் சில இடங்களில் டிசம்பா் 23 முதல் டிசம்பா் 26 வரை குளிா் அலை இருக்க வாய்ப்புள்ளது. அதாவது இந்தக் காலக்கட்டத்தில் மிதமானது முதல் அடா்த்தியான மூடுபனி இருக்கும்.

சமவெளிகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக இருக்கும்போது குளிா் அலை இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேபோன்று, தொடா்ச்சியாக இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 4.5 புள்ளிகள் குறைவாக குறைவாக வெப்பநிலை இருந்தாலும் குளிா் அலை இருப்பதாக அறிவிக்கப்படும்.

இருப்பினும், தில்லி போன்ற சிறிய பகுதிகளுக்கு, ஒரு நாள்கூட அளவுகோல்கள் பூா்த்தி செய்யப்பட்டால், குளிா் அலை அறிவிக்கப்படலாம் என்று ஐஎம்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு 323 ஆக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. தில்லி பல்கலை., பூசா, லோதி ரோடு, மதுரா ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரியாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 321 ஆக இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும். அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com