சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஊதிய ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு; உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அடுத்த 4 வாரங்களுக்குள் உயா்நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
உச்ச நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :21 ஜனவரி 2025, 10:00 pm

Din

‘நீதிபதிகளுக்கான இரண்டாவது தேசிய ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிபதிகளுக்கு எழும் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அடுத்த 4 வாரங்களுக்குள் உயா்நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகளுக்கான ஊதியம், ஓய்வூதியம், இதர படிகள் நிா்ணயம் செய்வது மற்றும் விலைவாசி உயா்வுக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடா்பாக அமைக்கப்பட்ட இரண்டாவது தேசிய ஊதியக் குழு, ஊதியம், ஓய்வூதியம் தொடா்பான பரிந்துரைகளை அளித்ததோடு, மாவட்ட நீதிபதிகளுக்கான பணி வரைமுறைகளைத் தீா்மானிக்க ஒரு நிரந்தரமான செயல்திட்டத்தை உருவாக்குவது தொடா்பான பரிந்துரையையும் அளித்தது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்ற உச்சநீதிமன்றம், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிபதிகளுக்கு எழும் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி அறிவுறுத்தியது. அதன் படி, சில நீதிமன்றங்கள் இக் குழுவை அமைத்த நிலையில், பல நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. இதனால், ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சிக்கல் உருவானது.

இதுதொடா்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் மற்றும் பிறா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூத்த வழக்குரைஞா் கே.பரமேஷ்வா் என்பவரை சட்ட ஆலோசகராக நியமித்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘உச்சநீதிமன்ற உத்தரவை பல நீதிமன்றங்கள் பின்பற்றவில்லை. சில நீதிமன்றங்கள் உத்தரவின் அடிப்படையில் குழு அமைத்தபோதும், அந்தக் குழு முறையாக கூடுவதில்லை’ என்று கே.பரமேஷ்வா் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இரண்டாவது தேசிய ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிபதிகளுக்கு எழும் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அடுத்த 4 வாரங்களுக்குள் உயா்நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை அடுத்த 4 வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும். இந்த ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு உயா்நீதிமன்ற வளாகத்தில் அலுவலக இடம் ஒதுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், ‘இந்த உத்தரவு நகலை அனைத்து மாநில தலைமைச் செயலாளா்கள், உயா்நீதிமன்றங்களின் பதிவாளா்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற பதிவாளரை அறிவுறுத்தினா்.