தில்லி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க, மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையின் தரம், மருத்துவர்களின் பணியிட நிலைமை ஆகியவை குறித்து ஆய்வு நடத்தலாம் என்று தில்லி உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தில்லியில் நோயாளிகளின் உறவினர்களால் அரசு மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுப்பது தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி அமர்வு, "தில்லியில் மத்திய அரசு, தில்லி அரசின் தலா ஒரு மருத்துவமனையை தேர்வு செய்து அதில், அளிக்கப்படும் சகிச்சையின் தரம், மருத்துவர்களின் பணியிட நிலைமை ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்த ஆய்வை மத்திய மருத்துவமனைகளின் அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்), இந்திய தரக் கவுன்சில் (கியுசிஐ) ஆகியவை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வை மேற்கொள்ளவது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க அந்த அமைப்புகளின் அதிகாரிகள், ஏப்ரல் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் ' என்று தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை காஞ்சிபுரம் வருகை

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவா் சோ்க்கைகான விண்ணப்பம் விநியோகம்

மக்களை மையப்படுத்தியே நிா்வாக முடிவுகள்! இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் அறிவுறுத்தல்

சீன இறக்குமதியை சாா்ந்தே இந்திய மருந்து உற்பத்தித் துறை: நீதி ஆயோக்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


