முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தில்லி அமைச்சர் மீதான தாக்குதல் விவகாரம்: போலீஸ் விசாரணையில் தில்லி நீதிமன்றம் திருப்தி

தில்லி தலைமைச் செயலகத்தில் ஆம் ஆத்மி அமைச்சர் இம்ரான் ஹுசைன் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து தில்லி காவல் துறை மேற்கொண்டு

Updated On :6 ஏப்ரல் 2018, 4:07 am IST

தில்லி தலைமைச் செயலகத்தில் ஆம் ஆத்மி அமைச்சர் இம்ரான் ஹுசைன் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து தில்லி காவல் துறை மேற்கொண்டு வரும் விசாரணையில் திருப்தி அடைந்துள்ளதாக தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நிலவர அறிக்கையை பெருநகர நீதிமன்ற நீதிபதிஅபிலாஷ் மல்ஹோத்ராவிடம் தில்லி காவல் துறை ஆய்வாளர் ரவீந்திர மாலிக் வியாழக்கிழமை அளித்தார். அப்போது அவர், "தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விடியோ பதிவு அடங்கியுள்ள ஹார்டிஸ்க்கை பெறும் பணி நடைபெற்று வருகிறது. ஹார்டிஸ்க் கிடைத்தவுடன் விடியோவின் உண்மைத் தன்மையை அறிய தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும், விசாரணையில் குற்றவியல் சட்டம் 186 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது), 353 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டுவது) உள்ளிட்டப் பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்று நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிபதி அபிலாஷ் மல்ஹோத்ரா,"இந்த விவகாரம் தொடர்பான காவல் துறை விசாரணையில் நீதிமன்றம் திருப்தி கொள்கிறது. விசாரணயை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
 தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை தாக்கியதாக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தில்லி தலைமைச் செயலகத்தில் தில்லி அமைச்சர் இம்ரான் ஹுசைன், அவரது உதவியாளர் தாக்கப்பட்டதாக ஏப்ரல் 20-ஆம் தேதி புகார் எழுந்தது. இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.