மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு: 9 பேர் மீது வழக்குப் பதிவு

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் பத்திரிகையாளரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை புகுந்து துப்பாக்கியால் சரமரியாக சுட்டனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:04 pm

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் பத்திரிகையாளரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை புகுந்து துப்பாக்கியால் சரமரியாக சுட்டனர். இதில், அவர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பெயர் குறிப்பிடாத 57 நபர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காஜியாபாத் காவல் துறையினர் கூறியதாவது: காஜியாபாத் பகுதி, கவி நகர் காவல் சரகப் பகுதியில் உள்ள ராஜாப்பூர் பகுதியில் வசிப்பவர் அனுஜ் சௌத்ரி. இவர் செய்தித்தாள் ஒன்றில் பத்திரிகையாளராக வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி நிஷா, பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர், அனுஜ் செளத்ரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். 
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அனுஜ் சௌத்ரி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காஜியாபாத் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காஜியாபாத் நகர காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறுகையில், "சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
இது குறித்து அனுஜ் சௌத்ரியின் உறவினர் தீபக் சௌத்ரியின் கூறுகையில், "அனுஜ் சௌத்ரியையும், அவரது மனைவி நிஷாவையும் ஒழித்துக் கட்ட ஒரு கும்பலுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பது குறித்து கவி நகர் காவல் ஆய்வாளர் சமர்ஜித் சிங்கிடம் தெரிவித்துள்ளோம்' என்றார். 
தீபர் சௌத்ரி புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பெயர் குறிப்பிடாத 57 நபர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளியைக் கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.