மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கர்னாவதி தமிழ்ச் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா குசபாவ் தாத்ரே கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:06 am IST

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா குசபாவ் தாத்ரே கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், "மனைவி கணவரிடம் அதிகம் எதிர்பார்ப்பது குணமா, பணமா, திறமையா? ' எனும் தலைப்பில் ஆடம்ஸின் அரட்டை அரங்கம் நடைபெற்றது.  தில்லியைச் சேர்ந்த அறிவழகன், சத்யா அசோகன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி மற்றும் மீனா வெங்கி, ரமேஷ் ஆகியோர் தில்லியிலிருந்தும், ஆமதாபாதில் இருந்து பலரும் பங்கேற்றனர்.
குருவை மதிக்கும் வகையில் ஆமதாபாத் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பலரும், கல்லூரி பேராசியர்களும் சிறப்பிக்கப்பட்டனர். ஏழை, எளிய மாணவர்களுக்கு கர்னாவதி தமிழ்ச் சங்கம் இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்க இருப்பதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலாஜி, செயலாளர் முருகவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை தில்லி கலை, இலக்கிய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பா.குமார் தொகுத்து வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.