முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஹிந்துக்களை தீவிரவாதிகள் என்பதா? சிவசேனை கண்டனம்

பகுத்தறிவுவாதிகள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரைக் கொன்றவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பகுத்தறிவுவாதிகள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரைக் கொன்றவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஹிந்துக்களுக்கு அவர்களது சொந்த நாட்டிலேயே "தீவிரவாதிகள்' என பெயர் சூட்டக்கூடாது என்று சிவசேனை தெரிவித்தது.
இதுகுறித்து அக்கட்சியின் நாளேடான "சாம்னா'வில் வெளிவந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பகுத்தறிவாதிகள் பன்சாரே, தபோல்கர், எம்.எம். கலபுர்கி மற்றும் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டது தனித்தனியான சதியாகக் கூட இருக்கலாம். அவர்கள் அனைவரின் கொலைக்கு பின்னால் ஒருவர் மட்டுமே இல்லாமல் இருக்கலாம். ஹிந்துத்துவவாதிகள் தவறிழைத்தால் நேரடியாக "தீவிரவாதிகள்' என்று கூறுகிறார்கள். ஆனால் நக்ஸல்களுடன் தொடர்பில் உள்ளவர்களை வெறும் "நக்ஸல் ஆதரவாளர்கள்' என்று மட்டும் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக பாஜக ஆட்சியில், ஹிந்துக்களுக்கு அவர்களது சொந்த நாட்டிலேயே தீவிரவாதிகள் என்று பட்டமளிப்பது ஆச்சர்யமளிக்கிறது. எனினும், வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று பாராமல் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாரை பட்னவீஸ் அறிவுறுத்துவது பாராட்டத்தக்கது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று சச்சின் அந்துர் என்பவரை சிபிஐ கைது செய்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, தபோல்கர் கொலைக்கும், பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு உண்டு என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. மேலும், வெடிப் பொருள்களை வைத்திருந்ததாக ஹிந்து அமைப்பின் பிரமுகர் உள்பட 5 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். அவர்களில் ஒருவரை சிறைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. 
கோல்ஹாபூரில் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பன்சாரே கொல்லப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகத்தில் கலபுர்கி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்கள் நால்வரின் கொலைக்கு பின்னால் இருக்கும் குற்றவாளி ஒருவர் தானா? என்பது இனிமேல் தான் கண்டுபிடிக்கப்படும். அவர்கள் அனைவரும் தனிப்பட்ட சிந்தனையாளர்கள். மாவோயிஸம் அல்லது சமாஜவாதி கொள்கைகளை பின்பற்றுபவர்களாகக் கூட இருக்கலாம்.
பன்சாரே கொலை வழக்கில் சமீர் கெய்க்வாட் என்பவரை சிபிஐ கைது செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவர் 2009 கோவா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று குற்றப் பத்திரிகையில் இருந்தது. ஒரே கொலை வழக்கில் எப்படி இத்தனை புதிய நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள்? கைதானவர்களை ஹிந்து தீவிரவாதிகள் என்று அரசு முடிவு செய்து அவர்களை தண்டிக்க நினைத்து விட்டது. 
குஜராத் கலவாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா தற்போது கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். இதில் இருந்து ஹிந்துத்துவ கொள்கை தீவிரவாதம் அல்ல என்று தெரிய வருகிறது. அந்த நால்வரை கொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஹிந்துக்களை தீவிரவாதிகளாக காட்டும் நடவடிக்கைகள் கூடாது என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.