
டாட்டூ கலைஞர் கொலை: இளைஞர்கள் மூவர் கைது
தில்லி பாண்டவ் நகரில், டாட்டூ கலைஞர் பப்லு (30) கொல்லப்பட்ட விவகாரத்தில் இளைஞர்கள் மூவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
தில்லி பாண்டவ் நகரில், டாட்டூ கலைஞர் பப்லு (30) கொல்லப்பட்ட விவகாரத்தில் இளைஞர்கள் மூவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
தில்லி பாண்டவ் நகரைச் சேர்ந்தவர் பப்லு. இவர் டாட்டூ கலைஞராக உள்ளார். இவர் கடந்த டிசம்பர் 10- ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அவரை சகோதரர் சோனு உள்ளிட்ட உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், பாண்டவ் நகரில் பப்லுவின் வீட்டுக்கு அருகிலுள்ள காலியிடத்தில் அவரது உடல் உறவினர்களால் கடந்த 16- ஆம் தேதி மீட்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்கிழமை இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 16- ஆம் தேதி பாண்டவ் நகர் காவல் ஆய்வாளர் நவீன் சந்திரா தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு பாண்டவ் நகர் பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கடந்த 10- ஆம் தேதி பப்லு, அவரது நண்பர்களான பிரஷாந்த் மிஷ்ரா (25), அங்கித் ஷர்மா (19), இந்திரஜித் (27) ஆகியோருடன் இருந்ததாகத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் பப்லுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் பப்லு பெருந்தொகையைக் கடனாகப் பெற்றுள்ளார். ஆனால், கடனைத் திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பல தடவை பணத்தைத் திருப்பி வழங்குமாறு கேட்டும் அவர் வழங்கவில்லை. இதனால், பப்லுவை கொலை செய்ய மூவரும் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், பப்பலுவை அவரது வீட்டுக்கு அருகிலுள்ள காலியிடத்துக்கு கடந்த 10- ஆம் தேதி வரச் செய்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர் என்றார் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





