மூன்று ஆண்டுகளில் அனைத்து மின்சார மீட்டர்களையும் ஸ்மார்ட் ப்ரீ பெய்டு மீட்டர்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய மின் துறை அமைச்சக உயரதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: மத்திய மின் துறை அமைச்சகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளில் அனைத்து மீட்டர்களையும் ஸ்மார்ட் ப்ரீ பெய்டு மீட்டர்களாக உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையானது மின் பகிர்மானத்தில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பைக் குறைப்பது, மின் விநியோக நிறுவனங்களின் ஆரோக்கிய நிலைமை, மின் சேமிப்புக்கான ஊக்குவிப்பு, பில்லுக்கான கட்டணங்கள் செலுத்துவதை எளிமைப்படுத்துவது, காகித பில் இல்லாத தன்மையை உருவாக்குவது ஆகியவை மூலம் மின் துறையில் புரட்சி ஏற்படுத்தக் கூடும்.
மேலும், இந்த நடவடிக்கை ஏழைகளுக்கு பயனளிக்கக் கூடியதாகும். அதாவது, நுகர்வோர் ஒரு மாதத்திற்கு மின்சாரக் கட்டணத் தொகையை ஒரே தடவையாக செலுத்தாமல் தங்களது தேவைக்கு ஏற்ப செலுத்த முடியும். மேலும், ஸ்மார்ட் ப்ரீ பெய்டு மீட்டர்கள் உற்பத்தியும் இளைஞர்களுக்கு திறன்மிக்க வேலைவாய்ப்பை உருவாக்கும். ஏற்கெனவே மாநில அரசுகள் தங்களது நுகர்வோருக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்வதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது நினைவுகூரத்தக்கது என்றார் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்

விரைவில் மனம் திறந்து பேசுவேன்: அண்ணாமலை

பாகிஸ்தான்- 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

உத்யோக் பவன் அருகே தீ விபத்து: தொழிலாளா்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


