வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பீதம்புராவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்ட அடிக்கல்

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) உள்பட்ட பீதம்புராவில் பல அடுக்கு கார் பார்க்கிங் அமைப்பதற்கான அடிக்கல்லை  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமை நாட்டினார்.

Updated On :9 ஜூலை 2018, 12:11 am

வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) உள்பட்ட பீதம்புராவில் பல அடுக்கு கார் பார்க்கிங் அமைப்பதற்கான அடிக்கல்லை  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமை நாட்டினார்.
வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடுமையான பார்க்கிங் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மாநகராட்சி சார்பில் நவீன பல அடுக்கு பார்க்கிங் தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி, தில்லி பீதம்புரா பகுதியில் புதிய கார் பார்க்கிங் தொகுதிக்கான அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை நாட்டப்பட்டது. 
அடிக்கல் நாட்டி வைத்துஅமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியதாவது:
இந்த கார் பார்க்கிங் தொகுதிகள் பிபிபி எனப்படும் தனியார் மற்றும் அரசின் கூட்டுப்  பங்களிப்புடன் உருவாக்கப்படுகிறது. இதன்படி, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மொத்தம் 58 பார்க்கிங் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கார் பார்க்கிங் தில்லியின் வாகன நெரிசல் பிரச்னையை பெருமளவில் குறைக்கும் என நம்புகிறேன். 
ஒவ்வொரு கார் பார்க்கிங்கிலும் சுமார் 500 கார்களை நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இந்த கார் பார்க்கிங் அமைக்கும் பணி  2 ஆண்டுகளில் நிறைவு பெறும். 
மேலும், தில்லியில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் மாநகராட்சி சார்பில் எல்இடி விளக்குகள் மிக விரைவில் பொருத்தப்படவுள்ளன என்றார் அவர். 
இதற்கிடையே,  தில்லி பாஜக சமூகவலைத்தள ஆர்வலர்களின் கூட்டம் தில்லி அம்பேத்கர் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  
இக்கூட்டத்தில்  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,   தகவல் தொழில்நுட்பத் துறை  இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி,  தில்லி பாஜக பொறுப்பாளர் ஷியாம் ஜாஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில்  மனோஜ் திவாரி பேசுகையில், 'மக்களிடையே விழிப்புணர்வை ஊட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், சமூக வலைத்தளங்களை சமூகப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். 
சமூக வலைத்தளங்களில் பதிவிடும் தகவல்களால் இந்தியாவின் பன்முகத் தன்மை, மத நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்டாது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தில்லியில் மாவட்ட ரீதியாக  சமூக வலைத்தள ஆர்வலர்கள் கூட்டம் ஆகஸ்டில் நடைபெறவுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.