/

மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் திட்டம் விரைவில் தொடக்கம்

தில்லியில் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை இம்மாதத்தில் தொடங்க மின் விநியோக நிறுவனமான டாடா பவர் தில்லி டிஸ்ட்ரிபுஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) அறிவித்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 12:12 am

DIN

தில்லியில் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை இம்மாதத்தில் தொடங்க மின் விநியோக நிறுவனமான டாடா பவர் தில்லி டிஸ்ட்ரிபுஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சஞ்சய் பங்கா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:  தலைநகர் தில்லியில் டிபிடிடிஎல் நிறுவனம் சுமார் 16 லட்சம் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு  மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் இம்மாதம் தொடங்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 5 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்நேர மின் பயன்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில், செல்லிடப்பேசி செயலியையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக வடக்கு தில்லி, வட மேற்கு தில்லியில் 2 லட்சம்  மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை அடுத்த ஓராண்டுக்குள் பொருத்தவதற்கு திட்டமிட்டுள்ளோம்.  2025-ஆம் ஆண்டுக்குள் 16 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்துக்கும், நுகர்வோருக்கு பயன் ஏற்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.