இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை: கேஜரிவால் ஒப்புதல்

மூத்த குடிமக்களுக்கான "முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை' எனும் பெயரிலான இலவசமாக புனித யாத்திரை மேற்கொள்ளும் திட்டத்திற்கு

Updated On :9 ஜூலை 2018, 7:17 pm

மூத்த குடிமக்களுக்கான "முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை' எனும் பெயரிலான இலவசமாக புனித யாத்திரை மேற்கொள்ளும் திட்டத்திற்கு அனைத்து ஆட்சேபங்களையும் நீக்கிவிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி வருவாய்த் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், "தில்லி அரசின் வருவாய்த் துறை, முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை திட்டம் எனும் பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்குவது தொடர்பாக முன்மொழிவை அளித்திருந்தது. இந்த முன்மொழிவுக்கு தில்லி அமைச்சரவை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், தில்லியின் துணைநிலை ஆளுநர் அலுவலகம் சில ஆட்சேபங்களை தெரிவித்ததால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. தற்போது இத்திட்டத்திற்கு தில்லி முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். 
இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் தில்லியின் ஒவ்வொரு சட்டப் பேரவையில் இருந்தும் 1100 மூத்த குடிமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவசமாக புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவை தில்லி அரசு ஏற்கும். 
இத்திட்டத்தின்கீழ் தில்லி -மதுரா- பிருந்தாவன்-ஆக்ரா-ஃபதேபூர் சிக்ரி- தில்லி, தில்லி -ஹரித்வார்- பிருந்தாவன்-ரிஷிகேஷ்-நீல்கண்ட்-தில்லி, தில்லி-அஜ்மீர்-புஷ்கர்-தில்லி, தில்லி - அமிருதரஸ்-வாகா பார்டர்- அனந்த்பூர் சாஹிப்-தில்லி, தில்லி - வைஷ்ணவதேவி- ஜம்மு-தில்லி ஆகிய வழித்தடங்களில் புனித யாத்திரைக்கு மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் தில்லியின் நிர்வாக அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்திருந்த நிலையில், இந்த திட்டத்திற்கு தில்லி முதல்வர் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை யோஜனாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆட்சேபங்களும் நீக்கப்பட்டுள்ளன' என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.