
சாலை விபத்தில் இளைஞர் சாவு
தெற்கு தில்லியில் உள்ள தெற்கு விரிவாக்கப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர், பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
தெற்கு தில்லியில் உள்ள தெற்கு விரிவாக்கப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர், பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
புதன்கிழமை காலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து போலீஸார் கூறியது: 30 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்து அவரது வாகனத்தின் மீது மோதியது. இதைத் தொடர்ந்து, அவரது வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மீது மோதியது. இதில் அந்த இளைஞர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, அந்தப் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






