ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சாலையில் சென்றுகொண்டிருந்த பைக்கில் திடீர் தீ: காயமின்றி உயிர் தப்பினார் வாகன ஓட்டி

தில்லியில் சாலையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பற்றியது. எனினும், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் காயமின்றி உயிர் தப்பினார்.

Updated On :21 மே 2018, 6:17 pm

தில்லியில் சாலையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பற்றியது. எனினும், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லி விமான நிலையத்திலிருந்து பாலம் பகுதி நோக்கி ஞாயிற்றுக்கிழமை பகலில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் ஏராளமான புகை வெளியேறியது. ஆனால் வாகன ஓட்டி இதை கவனிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரது பின்னால் காரை ஓட்டி வந்தவர், வாகனப் புகை வெளியேறுவது குறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டியிடம் தெரிவித்தார். ஆனால், அதை அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணம் செய்தார். சில நிமிடங்களில் தீயின் தாக்கத்தை வாகன ஓட்டி உணரத் தொடங்கினார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட அவர், மோட்டார் சைக்கிளை அவரசமாக நிறுத்தி வாகனத்தைவிட்டு இறங்கித் தப்பினார். இதையடுத்து, மோட்டார் சைக்கிள் தரையில் கவிழ்ந்தது. தீ வேகமாப் பரவி மோட்டார் சைக்கிள் முழுவதும் எரியத் தொடங்கியது. இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைத்தனர். எனினும் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும், இந்த தீ விபத்தில் வாகன ஓட்டி காயமின்றி தப்பியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.