தில்லியில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் வரும் மே 28-ஆம் தேதி திறந்துவைக்கப்படவுள்ளது.
தொடக்க விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய வழித்தடத்தை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் மே 29-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
ஏற்கெனவே மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகள் முதலாவது, இரண்டாவது கட்டமாக நடைபெற்று முடிவடைந்தன. இதையடுத்து, தலைநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மெட்ரோ ரயில்வே திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகள் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஜனக்புரி மேற்கு மற்றும் கால்காஜி மந்திர் இடையேயான 25.6 கி.மீ. தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, புதிய மெட்ரோ வழித்தடம் திறக்கப்பட உள்ளது.
இதற்கான விழா நேரு என்கிளேவ் மெட்ரோ ரயில் நிலையத்தில், மே 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் கலந்துகொண்டு புதிய வழித்தடத்தைத் திறந்து வைக்க உள்ளனர். ரயில் தடம் தொடக்க விழாவையடுத்து, இருவரும் நேரு என்கிளேவ் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஹோஸ் காஸ் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) மக்கள் தொடர்பு பிரிவு நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் மேலும் கூறியதாவது:
ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையிலான மெட்ரோ ரயில்வே வழித்தடம் மே 28-இல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை மே 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் தொடங்கும். மூன்றாம் கட்ட ரயில்வே திட்டத்தில் புறவழிச்சாலை முழுவதையும் சென்றடையும் வகையில் 38.2 கிமீ தூரம் மெஜந்தா வழித்தடமானது ஜனக்புரி மேற்கு மற்றும் பொட்டானிகல் கார்டன் இடையே அமைக்கப்பட்டுள்ளது.
ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில், ஜனக்புரி மேற்கு, டாப்ரி மோர், பாலம், தசரத்புரி, சதர் பஜார். டெர்மினல் 1 - ஐஜிஐ ஏர்போர்ட், சங்கர் விஹார், வசந்த் விஹார், முனிர்கா, ஆர்.கே. புரம், பஞ்ச்சீல் பார்க், சிராக் தில்லி, ஹோஸ் காஸ், ஐஐடி, ஜி.கே. என்கிளேவ், நேரு என்கிளேவ் ஆகிய 16 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
25.6 கி.மீ. தூர வழித்தடத்தில் 23 கி.மீ. தூரம் பாதாள ரயில் பாதையாகும். மீதமுள்ள தூர வழித்தடம் தரைக்கு மேல் உள்ள வழித்தடமாகும். சதர் பஜார், சங்கர் விஹார் ரயில் நிலையங்கள் மட்டுமே மேம்பால ரயில் நிலையங்களாகும்.
இந்த வழித்தடத்தில் ஜனக்புரி மேற்கு மற்றும் ஹோஸ் காஸ் பகுதியில் இடைமாறி செல்லும் சந்திப்புகள் அமைந்துள்ளன. ஜனக்புரி மேற்கு ரயில் நிலையத்தில் இருந்து துவாரகா- நொய்டா/வைஷாலி வழித்தடத்திலும், ஹோஸ் காஸ் ரயில் நிலைய சந்திப்பில் இருந்து ஹூடா சிட்டி சென்டர்- சமய்பூர் பாத்லி வழித்தடத்திற்கும் பயணிகள் இடைமாறிச் செல்லலாம் என்று ரயில்வே உயர் அதிகாரி அனுஜ் தயாள் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

