தில்லி அரசு 500 சாதாரண பேருந்துகளைக் கொள்முதல் செய்ய தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
கடந்த 2ஆம் தேதி தில்லி அரசு 500 சாதாரண பேருந்துகள் வாங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், புதிதாக வாங்கப்படும் சாதாரண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு ஏற்றவாறு ஹைட்ராலிக் தூக்கிகள் இருக்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்தது.
தாழ்தள பேருந்துகளுக்கு பதிலாக சாதாரண பேருந்துகள் வாங்கும் தில்லி அரசின் முடிவுக்கு எதிராக மாற்றுத்திறனாளி நிபுன் மல்ஹோத்ரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், தில்லி அரசு 1000 சாதாரண பேருந்துகள் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு தடை ஏற்பட்டது.
இந்நிலையில், தில்லி பொது போக்குவரத்தை ஊக்குவிக்க புதிய பேருந்துகள் வாங்குவது அவசியம் என்றும் புதிய சாதாரண பேருந்துகளில் ஹைட்ராலிக் தூக்கிகள் பொருத்தப்படும் என்று தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதையடுத்து, கடந்த 2ஆம் தேதி 500 சாதாரண பேருந்துகள் வாங்க தில்லி அரசுக்கும், தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதே வாக்குறுதியை தில்லி அரசு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலும் அளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், "ஹைட்ராலிக் தூக்கிகள் பொருத்தப்பட்ட 500 சாதாரண பேருந்துகள் வாங்க தில்லி அரசுக்கும், தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நிபுன் மல்ஹோத்ரா தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக மல்ஹோத்ராவின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றாலம் செண்பகாதேவி கோயிலில் ரூ3.87 லட்சத்தில் ஜெனரேட்டா் வசதி
காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது

வாக்குகளை எண்ணும் பணியாளா்களுக்குப் பயிற்சி
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

