தில்லியில் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட இருவரை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) விஜய் குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
சங்கம் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை பணம் எடுத்துள்ளார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த இருவர் ஏடிஎம்மின் பொத்தனை அழுத்தியுள்ளனர். இதனால் ஏடிஎம் அப்படியே செயல்படாமல் நின்றுவிட்டது. எனினும், அந்த பாதுகாப்பு படை வீரரின் செல்லிடப்பேசிக்கு ரூ. 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
அதைக் கண்டவுடன், சந்தேகம் அடைந்த அந்த வீரர் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார். அவர்கள் தப்பிக்க முயன்றதால் அவர்களைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அன்கிட் (23), குல்ஷன் (22) ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 7 ஏடிஎம் கார்டுகள், ரூ. 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

