தெற்கு தில்லியில் கோயில் வளாகத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் விஜய் குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியைச் சேர்ந்தவர் நாப்பே பகத் (42). தன்னை சாமியார் எனக் கூறிக் கொள்ளும் இவர், தெற்கு தில்லி, ஃபதேபூர் பேரியில் உள்ள கோயில் ஒன்றை பராமரித்து வருகிறார். இவரிடம் சம்பவத்தன்று பெண் ஒருவர் தனது மகன் நோய் குணமாக வேண்டி சாமியாரிடம் சென்றார். அப்போது, 15 வயது உறவுக்காரச் சிறுமியும் உடன் சென்றார்.அச்சிறுமியிடம் சாமியார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், இதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணை சாமியார் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நாப்பே பகத் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி நாப்பே பகத் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி விஜய் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!

தனிநபர் சாதனையைக் காட்டிலும் அணியின் இலக்கே முக்கியம்: புவனேஷ்வர் குமார்

சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்

நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் தொடங்கிய தமிழக அரசு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

