விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தில்லி சாலைக்கு முதலாம் ராஜேந்திர சோழன் பெயரிட வேண்டும்: தமிழ் ஆர்வலர் தருண் விஜய் வலியுறுத்தல்

தில்லியில் உள்ள முக்கியமான சாலைகளில் ஒன்றுக்கு தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பெயர்

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

தில்லியில் உள்ள முக்கியமான சாலைகளில் ஒன்றுக்கு தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலரும், மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினருமான தருண் விஜய் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழின் பெருமையையும், தமிழகத்தின் மாபெரும் தலைவர்களையும், தமிழின் தொன்மைக்கு பங்களிப்பு செய்தவர்களையும் வட இந்திய மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவருக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பின் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
திருவள்ளுவரின் சிலையை ஹரித்துவார் கங்கையின் கரைப் பகுதியில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நிறுவப்பட்டது. அதேபோல, வட இந்தியாவின் கங்கை நதி வரையிலும், இந்தியாவின் மேற்கு கடல் பகுதி வரையிலும் சோழப் பேரரசை நிறுவி முதலாம் ராஜேந்திர சோழ மன்னர் ஆட்சி செய்தார். குறிப்பாக ஒரு வலிமையான கடற்படையை அவர் நிறுவியிருந்தார்.
அவர் ஒரு தமிழர் என்பது மட்டுமின்றி, இந்தியர் என்ற முறையில் வட இந்தியாவில் வாழும் மக்கள் அவர் குறித்த வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெருமை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். இந்நிலையில், முதலாம் ராஜேந்திரச் சோழன் குறித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு முதல் முறையாக வட இந்தியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து பிராந்திய அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட உள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.
 இந்த வானொலி நிகழ்ச்சியில் இந்திய கப்பற்படையின் ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் சதீஷ் சோனி, முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படை உத்திகள் குறித்து பேசவுள்ளார்.
இந்த தருணத்தில், முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை வட இந்தியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தில்லியில் உள்ள பிரதான சாலைகளில் ஏதாவது ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும்.
இதே போல, வட இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ராஜேந்திர சோழனின் சகாப்தம் குறித்த பாடம் இடம் பெறவும், தில்லியில் அவரது சிலையை நிறுவவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இது தொடர்பாக புது தில்லி முனிசிபல் கவுன்சில் ( என்டிஎம்சி), மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.