இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விதிமுறைகளை மீறும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை: கேஜரிவால் எச்சரிக்கை

புதை சாக்கடையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை இறங்குமாறு

Updated On :23 ஜனவரி 2019, 11:23 pm IST

புதை சாக்கடையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை இறங்குமாறு நிர்பந்திக்கும் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
வடக்கு தில்லி, வாஜிராபாத் அருகே திமர்பூரில் புதை சாக்கடையில் இறங்கிய ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர் கிஷான்(37) கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இந்நிலையில், உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி கிஸானின் குடும்பத்தினரை முதல்வர் கேஜரிவால் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று கேஜரிவால் உறுதி அளித்தார்.
உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை மாலையில் தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஷீலா தீட்சித் சந்திக்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில், புதன்கிழமை மதியம் முதல்வரின் இந்தச் சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறியதாவது:
தில்லியில் உள்ள பெரும்பாலான சாக்கடைகள் இயந்திரங்களின் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன. புதை சாக்கடைகளுக்குள் துப்புரவுப் பணியாளர்கள் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சில ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை. 
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு தேவையான பாதுகாப்புக் கவசம் வழங்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. புதை சாக்கடையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை இறங்குமாறு நிர்பந்திக்கும் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஷீலா தீட்சித்தும் ஆறுதல்
திமர்பூரில் புதை சாக்கடையில் சிக்கிஉயிரிழந்த துப்புரவுப் பணியாளர் கிஷானின் மனைவி, குழந்தைகளை காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித்தும் புதன்கிழமை மாலையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "புதை சாக்கடையில் சிக்கி துப்புரவுப் பணியாளர் கிஷான் இறந்தது தொடர்பாக அவரது குடும்பத்தைச் சந்தித்து தில்லி முதல்வரோ, தில்லி அரசு உயரதிகாரிகளோ கடந்த இரு நாள்களாக தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் இச்சம்பவம் குறித்து தில்லி அரசு விசாரணை நடத்த வேண்டும்' என்றார். இச்சந்திப்பின்போது, தில்லி முன்னாள் அமைச்சர் மங்கத் ராம் சிங்கல், கட்சியின் தில்லி தலைமை செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி, செய்தித் தொடர்பாளர்கள் ரமாகாந்த் கோஸ்வாமி, முன்னாள் எம்எல்ஏ சுரீந்தர் பால் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கிஷானின் குடும்பத்தினரை புதன்கிழமை மாலையில் சந்திக்கப் போவதாக ஷீலா தீட்சித் அறிவித்திருந்த நிலையில், அதை அறிந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னதாகவே சென்று பிற்பகலில் அவசர, அவசரமாக கிஷானின் குடும்பத்தைச் சந்தித்ததாகப் பேசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.